சீன மேற்குலக உறவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீனாவுக்கும் மேற்குலக்குமான உறவு எப்பொழுதும் சிக்கலான ஒன்றாகவே இருந்து வருகிறது. மேற்குலகின் சீனா மீதான காலனித்துவ ஆதிக்கம் சீனாவின் வரலாற்றில் உறைந்த ஒரு வடுவாகவே இருக்கிறது. மேற்குலகு வளர்ச்சி பெற்று இருக்க சீனா மூன்றாம் உலக நாடாக பின் தங்கி, தற்போதுதான் சற்று பலம் பெற தொடங் இருக்கும் நிலையில் சீன மேற்குல உறவு அதன் சமனற்ற உறவு நிலையில் இருந்து கூடிய சமனுள்ள நிலைக்கு நகரத் தொடங்கி உள்ளது. ஒரு வழியில் சீனாவின் வளர்ச்சியை வரவேற்கும் மேற்குலகு, அதன் வளர்ச்சி பயங்கரமானதாகவும் உணர்கிறது.

ஒரு பிள்ளை சட்டமும் மனித உரிமையும்[தொகு]

மக்கள் தொகை அதிகரிப்பு இருபதாம் நூற்றாண்டின் முக்கிய பிரச்சினையாகப் பாக்கப்பட்டது. அதைக் கட்டுபடுத்தவது பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்று பலராலும் முன்வைக்கப்பட்டது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா அதன் மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரு பிள்ளை சட்டத்தை இறுக்கமாக நடைமுறைப்படுத்தியது. முதலில் அதை ஏற்றுக்கொண்ட மேற்குலகு, பின்னர் அந்த சட்டத்தை மனித உரிமை மீறலாக பார்த்தது.

தொழில்மயமாக்கம் சூழல் பாதிப்பும்[தொகு]

மேற்குலகு தொழில்மயமாகிய போது, தொடர்ந்து சூழல் பாதிப்பு ஒரு பக்க விளைவாக இருந்தே வருகிறது. அதே மாதிரி சூழல் பாதிப்பு சீனாவிலும் வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளிலும் பெருகிறது. தற்போது நல்ல வளங்களைக் குவித்து வைத்திருக்கும் மேற்குநாடுகள் சூழல் பாதிப்பை திருத்ம் செயற்பாடுகளில் இறங்கியுள்ளன. இதுவும் சீனாவுக்கும் மேற்குலகுக்கும் ஒரு சிக்கலான பிரச்சினையாக அமைகிறது.

ஆபிரிக்க முதலீடு[தொகு]

மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக இன்றுவரை மேற்குலகே ஆபிரிகாவில் அதிக செல்வாக்கை செலுத்துகிறது. எனினும் ஆபிரிக்கா மிகவும் தாழ்ந்த பொருளாதார, அரசியல், பண்பாட்டு நிலையில் இருக்கிறது. சீனா இப்பொழுது ஆபிரிக்காவில் குறிப்பிடத்தக்க முதலீட்டை செய்க்கிறது. கைமாறாக எண்ணெய் மற்றும் கனிம வளங்களைப் பெறுகிறது. சீனா ஆபிரிக்காவைச் சுரண்டுவதாக சில மேற்குலக அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

சீனாவின் பொருளாதார மேம்பாடும் மேற்குலக கடனும்[தொகு]

சீனாவி துரித பொருளாதார வளர்ச்சி அதன் உற்பதித் துறையால் ஏதுவாக்கப்பட்டது. குறைந்த விலைக்கு பொருட்களை உறபத்தி செய்வதால் மேற்கு நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு அதன் பொருட்கள் பெருந்தொகையில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனால் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை விட கூடுதலாக இறக்குமதி செய்து export defict மேற்குலகு திணறுகிறது. இது தற்காலிகமாக மேற்குலகின் உயர் நுகர்வுப் போக்கையும் வாழ்வு தரத்தையும் நிலை நிறுத்தினாலும், நீண்ட நோக்கில் இது ஆரோக்கியமானது அல்ல. இத்தகைய போக்கால் சீனாவின் Reserves உயர்ந்து சீனாவின் பொருளாதார அரசியல் பலத்தை அதிகரிக்கும் என்று மேற்குலக நாடுகள் அஞ்சுகின்றன.

குறைந்த விலையை நாடி மேற்குலக தொழிற்சாலைகள் சீனாவுக்கு இடம் பெயர்கின்றன. இது வேலை மேற்குலகில் வேலை இழப்புக்கு இட்டு செல்கிறது.

திறந்த சந்தை[தொகு]

சீனா திறந்த சந்தையை ஓரளவு ஏற்க்கொண்டதை மேற்குநாடுகள் வரவேற்றாலும், அது வேகமாக தமது சந்தையை துறக்க வில்லை என்று குற்றம் சாட்டுகின்றன. சீனாவில் அதிகரிக்கும் ஏற்ற தாழ்வையும் இவை சாடுகின்றன.

இவற்றையும் பாக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீன_மேற்குலக_உறவுகள்&oldid=2747975" இலிருந்து மீள்விக்கப்பட்டது