சீந்திற்கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சீந்திற்கொடி
Tinospora cordifolia.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
Plantae
பிரிவு: Magnoliophyta
வகுப்பு Magnoliopsida
வரிசை: Ranunculales
குடும்பம்: Menispermaceae
பேரினம்: Tinospora
இனம்: T. cordifolia
இருசொற்பெயர்
Tinospora cordifolia
(Thunb.) Miers

சீந்திற்கொடி (Tinospora cordifolia) மரங்களில் தொற்றிப் படரும் ஒரு மூலிகைத் தாவரமாகும். தண்டின் மேல் பகுதியில் தடித்த தோல் மூடி இருக்கும். தோலுக்கு மேல் மெல்லிய காகிதம் போன்ற படலம் மூடியிருக்கும். இலைகள் இதய வடிவில் இருக்கும். இவை மரங்களின் மேல் ஏறி படரும். கொடியை அறுத்து விட்டாலும் உலர்ந்து போகாது. காற்றிலுள்ள நீரை உறிஞ்சும் வாழும் திறனுடையது. அறுபட்ட இடத்திலிருந்து மெல்லிய கம்பி போன்ற கொடிகளை கீழ் நோக்கி வளர விட்டு பூமியில் வேரூன்றி கொண்டு பூமியிலிருந்து நீரை உறிஞ்சி வாழ ஆரம்பிக்கும்.

பயன்கள்[தொகு]

சித்த மருத்துவத்தில் சீந்தில் கொடியை கற்ப மருத்துவ குணம் (கற்ப மருந்து என்பது மனிதன் நீண்ட நாள் உயிர் வாழ உதவுவது என்பது பொருள்) கொண்டதாக கூறப்பட்டுள்ளது. கிராமங்களில் குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க கொடியின் சிறு துண்டை எண்ணெயில் பொரித்து ஆற வைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவது வழக்கம். பெரியவர்களூக்கும் சளிக்கு சீந்தில் கொடியிலிருந்து மருந்து தயாரிக்கலாம். முற்றிய சீந்தில் கொடியிலிருந்து சீந்தில் சர்க்கரை என்னும் வெண்மையான பொடி தயாரிப்பர். அதற்கு சீந்தில் சர்க்கரை என்று பெயர். சித்த மருந்து தயாரிப்பில் சீந்தில் சர்க்கரை பயன்படுகின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சீந்திற்கொடி&oldid=1682797" இருந்து மீள்விக்கப்பட்டது