சி. சிவசேகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. சிவசேகரம்
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுபேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளர் ஈழத்து எழுத்தாளர்

சி. சிவசேகரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். கவிதைகள், விமர்சனங்கள், அரசியற் கட்டுரைகள் மற்றும் கவிதை மொழிபெயர்ப்புக்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும் எந்திரவியல் பிரிவின் தலைவராகவும் பதவிவகிக்கிறார்.[1] 2002 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு ஆளுனர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.[2]

கலை இலக்கிய பணி[தொகு]

இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையின் பொதுச் செயலாளராக கடமையாற்றினார். தாயகம் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராவார்.

வெளிவந்த நூல்கள்[தொகு]

கவிதைகள்

  • நதிக்கரை மூங்கில் 1983, 1985
  • செப்பனிட்ட படிமங்கள் 1988
  • தேவி எழுந்தாள் 1991
  • போரின் முகங்கள் 1996
  • ஏகலைவ பூமி 1998
  • வடலி 1999
  • இன்னொன்றைப் பற்றி 2003
  • about another matter 2004
  • கல்லெறி தூரம் 2008
  • முட்கம்பித் தீவு 2010
  • ஆச்சியின் கொண்டையூசிகள் 2021
  • சிவசேகரம் கவிதைகள் 2022

மொழிபெயர்ப்புக் கவிதைகள்

  • மாஓசெதுங் கவிதைகள் 1976
  • பணிதல் மறந்தவர் 1993
  • பாலை (அடோனிஸ் கவிதைகள்)1999
  • மறப்பதற்கு அழைப்பு 2003

பா நாடகம்

  • பாட்டும் கூத்தும் (பிரேமளாவுடன் இணைந்து) 2000
  • கிட்கிந்தை 2002

நாடகம் (தமிழாக்கம்)

  • அபராதி நானல்ல 2001
  • சமூக விரோதி 2002

மொழி

  • தமிழும் அயலும் 1993
  • தமிழிற் தரிப்புக்குறிகளின் பயன்பாடு 1994

சமூகம்

  • இலங்கையின் இன்றைய அரசியல் நிலைமையும் தேசிய சிறுபான்மை அரசியல் பிரச்சினையும் 1976
  • கனிவுமில்லை, கருணையுமில்லை 1989
  • மரபும் மார்க்சிய வாதிகளும் 1989
  • மரபும் மார்க்சிய வாதிகளும் (விரிவாக்கியது) 1999
  • தேசிய வாதமும் தமிழர் விடுதலையும் 1999
  • The Sri Lankan National Crisis and the search for Solutions 2008
  • இலங்கை : தேசிய இனப் பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும் 2009

சமூகம் (தமிழாக்கம்)

  • கார்ள்மார்க்ஸின் வாழ்வும் போதனைகளும் (மூலம் நா. சண்முகதாசன்) 2002
  • சண்முகதாசன் கட்டுரைகள் 2003

இலக்கியக் கொள்கை

  • எதிர்ப்பிலக்கியமும் எஜமானர்களும் 2000

மெய்யியல்

  • பின்னவீனத்துவம் மாயைகளைக் கட்டுடைத்தல் (+ கேசவனும் பிறரும்) 2007

விமர்சனம்

  • விமர்சனம் 1998
  • சிவசேகரத்தின் விமர்சனங்கள்- 2 2002

விஞ்ஞானக் கட்டுரையாக்கம்

  • Technical Report writing (+CLV Jayatillake) 1979


ஆதாரம்[தொகு]

  1. "எந்திரவியல் பிரிவு". Archived from the original on 2006-03-24. பார்க்கப்பட்ட நாள் 2006-09-25.
  2. தமிழ் நெட்

நூலகம் திட்டத்தில் இவரது நூல்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._சிவசேகரம்&oldid=3689185" இலிருந்து மீள்விக்கப்பட்டது