திருவைந்தெழுத்து
சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும்.இது பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படும். சிவாயநம எனவும் இதனைக் கொள்வர். சிவாயநம என்பது சிவபெருமானைப் போற்றிப் பாடும் மந்திரச் சொல்லாக உள்ளது. இதற்குப் பல பொருள் உண்டு என்று இந்து சமயத்தில் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
யசுர் வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் உருத்திர மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது. வேத மந்திரத்தை முறைப்படி தீட்சை பெற்றுத்தான் ஓத வேண்டும் என்பது விதி. ஆனால் சதா காலமும் அனைவரும் ஓதக்கூடிய மந்திரமாகத் 'திருவைந்தெழுத்து' கூறப்படுகிறது.
பொருளடக்கம் |
விளக்கம் [தொகு]
திருமூலர் முதலான தமிழ்ப் புலவர்கள் உட்பட இம் மந்திரத்துக்கு அவரவர் கண்ட விளக்கங்களைக் கூறியுள்ளனர். அவை எந்த மொழியியலையும் பின்பற்றவில்லை. உண்மையில் அவை மந்திரமொழி.
- மந்திரம் பொதுமொழி. அதனைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பது ஒரு சாரார் கருத்து
- நமசிவாய மந்திரம் தமிழ் என்போர் தமிழியல் வழியில் சில விளக்கங்களைத் தருகின்றனர்.
- நமசிவாய மந்திரம் வடமொழி என்போர் சில விளக்கங்களைத் தருகின்றனர்.
மந்திரமா, தமிழா, வடமொழியா என்பது அவரவர் மனப்பாங்கைப் பொருத்தது. இது சரி, இது தவறு, என யாராலும் நிறுவ இயலாது.
தமிழியல் விளக்கம் [தொகு]
நமசிவாய
சிவாயநம
- நம - 'நாம்' என்னும் பால்பகா அஃறிணைப் பெயரின் ஆறாம் வேற்றுமை நிலை 'நம'. இது 'அது' என்னும் உருபினை ஏற்கும்போது 'நமது' என வரும். உருபு மறைந்திருக்கும் வேற்றுமைத்தொகையில் 'நம' என நிற்கும். இது 'என் கை' 'என கைகள்' என்று அமைவதைப் போன்றது.
- சிவ் - சிவன் 'சிவ்' என்னும் சத்தியை அவளிடம் பெற்றுக்கொண்டு அவளோடு ஒன்றாய் இருப்பவன்.
- ஆய - ஆயம். ஆய என முடிந்த பின்னர் மீண்டும் நம வந்து சேரும்போது மகர-ஒற்று இடையில் தானே வந்துவிடும். சிவாய[ம்]நம எனவே ஆய என்பது ஆயம் ஆகிவிடும். ஆயம் என்பது ஆயத்தாராகிய திருக்கூட்டம்
இவற்றால் நாம் அறிவது நம்முடையவை சிவத்திருக்கூட்டம் என்பதே 'நமசிவாய' என்பதன் பொருள்.
நமச்சிவாய
- நம் அச்சு இவ் ஆய[ம்]
நமக்கு அச்சாக இருப்பதெல்லாம் நம்முடன் இருக்கும் திருக்கூடமே. பிறர் இல்லாமல் நம்மால் தனித்து வாழமுடியாது அல்லவா?
வடமொழி விளக்கம் [தொகு]
திருவைந்தெழுத்து விளக்கம் [தொகு]
திருவைந்தெழுத்தான நமசிவாய இலுள்ள ஒவ்வொரு அட்சரமும் தத்துவப் பொருளுடையவை.
- ந - திரோத மலத்தையும்,
- ம - ஆணவ மலத்தையும்,
- சி - சிவமயமாயிருப்பதையும்,
- வா - திருவருள் சக்தியையும்,
- ய - ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன.
இதன் உட்பொருள் உயிர்களில் உறைந்துள்ள ஆணவமும் மாயையும் விலகி சிவசக்தி சிவத்துடன் ஐக்கியமாவதே நமசிவாய என்பதன் பயன் என்பதாகும்.
திருவைந்தெழுத்து ஓதுவதன் பயன்கள் [தொகு]
ஆன்மாவுக்கு நற்றுணையாகவும் உயிர்த்துணையாகவும் அமைவது இம்மந்திரமாகும். வாழ்வில் துன்பங்களைப் போக்கவும் இன்பங்களை இயைபாக்கவும் திருவைந்தெழுத்தை உச்சரிப்பது சைவசமயிகளின் முடிபாகும்.
திருவைந்தெழுத்தின் சிறப்புக் கூறும் இலக்கியங்கள் [தொகு]
- "சிவாயநம என்று சிந்தித்திருப் போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை" - ஔவையார்.
- "கற்றுணைப் பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே" - திருநாவுக்கரசர்
- "நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க" - மாணிக்கவாசகர்
திருவைந்தெழுத்தின் வேறு வடிவங்கள் [தொகு]
- தூல பஞ்சாட்சரம் - நமசிவய
- சூட்சும சாட்சரம் - சிவயநம
- ஆதி சாட்சரம்- சிவயசிவ
- காரண சாட்சரம் - சிவசிவ
- மகாகாரண சாட்சரம் - சி