சிலேசிய மொழி
| சிலேசிய மொழி Ślůnsko godka |
||
|---|---|---|
| நாடுகள்: | போலந்து, செக் குடியரசு, ஜெர்மனி, ஐக்கிய அமெரிக்கா | |
| பகுதி: | மேல் சிலேசியா / சிலேசியா | |
| பேசுபவர்கள்: | > 1 250 000[மேற்கோள் தேவை] | |
| மொழிக் குடும்பம்: | இந்தோ-ஐரோப்பிய சிலாவிய மேற்கு சிலாவிய சிலேசிய மொழி |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | சேர்க்கப்படவில்லை | |
| ISO/FDIS 639-3: | szl | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
சிலேசிய மொழி (Silesian: ślůnsko godka, ślůnski, sometimes also pů našymu) போலந்தில் மேல் சிலேசியா நிலப்பரப்பில் வாழும் மக்களால் பேசப்படும் ஒரு இந்திய-ஐரோப்பிய மொழியாகும். அதோடு நிலப்பகுதிக்கு அண்டிய யேர்மனி, செக் நாட்டுப் பகுதிகளிலும் பேசப்படுகிறது. சிலேசிய மொழியை 509 000[1] மக்கள் தமது தாய் மொழியாக கொண்டிருப்பதாக 2011 கணக்கீடு ஒன்று தெரிவிக்கிறது (ஆதாரம் தேவை). இரண்டாம் மொழியாகவும் பயன்படுத்துவோரையும் கணக்கில் எடுத்தால் சிலேசிய மொழி பேசுவோரின் எண்ணிக்கை 1 250 000 ஆக உயர்கிறது.
சிலேசிய மொழி போலிய மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. இதை போலந்து மொழியின் வட்டார வழக்கு என்றும் சில மொழியியல் வல்லுனர்கள் வகைப்படுத்துவர்.
எழுத்துமுறை [தொகு]
சிலேசிய மொழி போலிய மொழியின் எழுத்துமுறையே நெடுங்காலமாக பயன்படுத்தி வந்தது. எனினும் 2006 இல் பண்டைய சிலேசிய எழுத்துமுறைகளை அடிப்படையாக கொண்டு ஒரு எழுத்துமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுவே சிலேசிய விக்கிப்பீடியாவிலும் பயன்படுத்தப்படுகிறது.
- Aa Bb Cc Ćć Čč Dd Ee Ff Gg Hh Ii Jj Kk Ll Mm Nn Ńń Oo Pp Rr Řř Ss Śś Šš Tt Uu Ůů Ww Yy Zz Źź Žž
- And some digraphs: Ch Dz Dź Dž.
வெளி இணைப்புகள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Narodowy Spis Powszechny Ludności i Mieszkań 2011. Raport z wyników - Central Statistical Office of Poland