சிலாவியப் பேரேரி
| சிலாவியப் பேரேரி | |
|---|---|
|
|
|
| புவியமைவுக் கூறுகள் | |
| வகை | மிகப்பெரிய பனியாற்று ஏரி ஒன்றின் எச்சம். |
| உள்வடிகால் | ஹே ஆறு, சிலாவ் ஆறு |
| வெளிப்போக்கு | மக்கன்சி ஆறு |
| வடிநிலம் | 9,71,000 கிமீ2 (3 ச மைல்)[1] |
| வடிநில நாடுகள் | Canada |
| அதிக அளவு நீளம் | 480 கிமீ (298 மை) |
| அதிக அளவு அகலம் | 109 கிமீ (68 மை) |
| மேற்பரப்பளவு | 27,200 கிமீ2 (10 ச மைல்)[1] |
| சராசரி ஆழம் | 41 மீ (135 ft)[1] |
| அதிக அளவு ஆழம் | 614 மீ (2 ft)[1] |
| நீர் கனவளவு | வார்ப்புரு:Km3 to mi3 |
| கரை நீளம்1 | 3,057 கிமீ (1 மை) [1] |
| மேற்பரப்பின் உயரம் | 156 மீ (512 ft)[1] |
| 1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவீடல்ல. | |
சிலாவியப் பேரேரி (Great Slave Lake) கனடாவின் வடமேற்கு ஆட்சிப் பகுதியிலுள்ள இரண்டாவது பெரிய ஏரியாகும். 614 மீ (2,015 அடி) ஆழம் கொண்ட இது வட அமெரிக்காவின் அதிக ஆழம் கொண்ட ஏரியுமாகும். உலக ஏரிகளின் அளவுகளுடன் ஒப்பிடும்போது இது ஒன்பதாவது பெரிய ஏரியாகும். இந்த ஏரி 480 கிமீ (298 மை) நீளமும், 19 தொடக்கம், 109 கிமீ வரையான அகலமும் கொண்டது. மேற்குறித்த ஆட்சிப்பகுதியின் தென் பகுதியில் 28,400 கிமீ² (11,000 ச.மைல்) பரப்பளவைக் கொண்டு இது அமைந்துள்ளது. 2,090 கிமீ³ (501.7 கன மைல்,1.694 பில்லியன் ஏக்கர் அடி). சிலாவே வட அமெரிக்க இந்தியர்களின் (Slavey North American Indians) பெயரைத் தழுவியே இந்த ஏரி அதன் பெயரைப் பெற்றது
இதற்கு நீர் வழங்கும் ஆறுகளில் முக்கியமானவை ஹே ஆறு (Hay), சிலாவே ஆறு (Slave) என்பனவாகும். இவ்வேரியின் மேற்குக் கரை காடாகக் காணப்படினும், கிழக்குக் கரையும், வடக்கில் நீண்டுள்ள பகுதியும் மரங்கள் வளர முடியாத பகுதியாக உள்ளன. கிரேட் பெயர் ஏரி, அதாபஸ்கா ஏரி என்பவற்றுடன் சிலாவியப் பேரேரியும் சேர்ந்து, பனியாறு உருகியதால் ஏற்பட்ட மிகப்பெரிய ஏரியாக இருந்தன.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found