தமிழில் சிற்றிலக்கியங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிற்றிலக்கியங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தமிழில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம் முதலியவற்றைச் சிற்றிலக்கியம் என்பர். சிற்றிலக்கியம் என்பது கீழ்காணும் அடிப்படைகளைக் கொண்டுள்ளது.
- சிற்றிலக்கியம் அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக அமைவது.
- அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.)
- பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
- அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது சிற்றிலக்கியம்.
- இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் என்ற வகைமையுள் அடங்கும்.[1]
பிரபந்தம் என்பது இலக்கிய வகைகள் பலவற்றைக் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும். சமஸ்கிருதத்தில் பிரபந்தம் என்னும் சொல், கட்டப்பட்டது எனப் பொருள்படும். தமிழில் சிற்றிலக்கியங்கள் எனப்படுபவை வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன.
சிற்றிலக்கிய வகைகள் [தொகு]
மற்றும்
போன்றனவும் உண்டு
மூலம் [தொகு]
- சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் லெக்சிகன்.