சிற்றாமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிற்றாமை (Olive ridley sea turtle)
தமிழ்நாட்டில் காணப்பட்ட ஒரு சிற்றாமை
தமிழ்நாட்டில் காணப்பட்ட ஒரு சிற்றாமை
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணிகள்
வகுப்பு ஊர்வன
வரிசை: Testudines
குடும்பம்: Cheloniidae
பேரினம்: Lepidochelys
இனம்: L. olivacea
இருசொற்பெயர்
Lepidochelys olivacea
(Eschscholtz, 1829)
வேறு பெயர்கள்
 • Testudo mydas minor Suckow, 1798
 • Chelonia multiscutata Kuhl, 1820
 • Chelonia olivacea Eschscholtz, 1829
 • Chelonia caretta var. olivacea Gray, 1831
 • Chelonia dussumierii Duméril & Bibron, 1835
 • Caretta olivacea Rüppell, 1835
 • Thalassochelys (Lepidochelys) olivacea Fitzinger, 1843
 • Caouana olivacea Gray, 1844
 • Caouana ruppellii Gray, 1844 (nomen nudum)
 • Chelonia subcarinata Rüppell, 1844 (nomen nudum)
 • Caouana dessumierii Smith, 1849 (ex errore)
 • Chelonia dussumieri Agassiz, 1857 (ex errore)
 • Chelonia polyaspis Bleeker, 1857 (nomen nudum)
 • Lepidochelys dussumieri Girard, 1858
 • Lepidochelys olivacea Girard, 1858
 • Chelonia dubia Bleeker, 1864 (nomen nudum)
 • Cephalochelys oceanica Gray, 1873 (nomen nudum)
 • Cephalochelys oceanica Gray, 1873
 • Thalassiochelys tarapacona Philippi, 1887
 • Thalassochelys tarapacana Philippi, 1887
 • Thalassochelys tarapacona Boulenger, 1889
 • Chelonia olivaccea Velasco, 1892 (ex errore)
 • Thalassochelys controversa Philippi, 1899
 • Caretta remivaga Hay, 1908
 • Caretta caretta var. olivacea Deraniyagala, 1930
 • Lepidochelys olivacea olivacea Deraniyagala, 1943
 • Caretta olivacea olivacea Mertens, 1952
 • Lepidochelys olivacea remivaga Schmidt, 1953
 • Caouana rueppellii Wermuth & Mertens, 1961 (ex errore)
 • Lepidochelis olivacea Tamayo, 1962
 • Lepidochelys olivaceas Kesteven, 1969 (ex errore)
 • Chelonia multicustata Márquez, 1990

சிற்றாமை ((ஆங்கிலத்தில்)) இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் காணப்படும் கடல் ஆமை வகையாகும்.[1] இவ்வகையைச் சேர்ந்த ஆமைகள் முக்கால் மீட்டர்வரை நீளமும் 50 கிலோ கிராம் வரை எடையும் கொண்டவை. இவற்றின் மேல் ஓடு தவிட்டு நிறம் கலந்த அடர் பச்சை வண்ணத்தில் இருக்கும். முக்கோண வடிவத்தில் உள்ள பெரிய தலையும், கால்களில் உள்ள நகமும் இவற்றை எளிதில் அடையாளம் காண உதவும். மீன்கள், இறால்கள், நண்டுகள் முதலான கடல் உயிரிகளைத் தின்று இவை வாழும்.

பெண் ஆமைகளை இடுலி என்பர்.[2] ஒரு தடவையில் இவை, 40 லிருந்து 125 முட்டைகள் வரை இடும். ஒரிசாவில் கஹிர்மாதா கடற்கரையில், ஒரு லட்சத்திற்கும் மேலான ஆமைகள் கூட்டமாக வந்து முட்டையிடுவதுண்டு. நவம்பர் - ஏப்ரல் இவை முட்டையிட ஏற்ற காலமாகும். சிற்றாமைகள் அதிக அளவில் கடற்கரைகளில் முட்டையிடும். இவை, இந்திய கிழக்குக் கடற்கரை பகுதியான ஒரிசாவின் கஹிர்மாதா, ருசிகுல்யா, தேவி ஆற்று முகத்துவாரத்தில் பெரிய எண்ணிக்கையில் முட்டையிடுகின்றன. இதற்காக ஆண்டுக்கு ஆறு லட்சம் சிற்றாமைகள் தமிழகம், புதுச்சேரி, ஆந்திர கடலோரப் பகுதியைக் கடந்து செல்கின்றன.[3] முட்டைகள் பெரும்பாலும் இரவிலேயே பொரிகின்றன. பொரிந்ததும் வெளிவரும் பார்ப்புகள்[4] தன்னியல்பாகவே கடல் நீரில் பட்டுத் தெறிக்கும் நிலவொளியை நோக்கி நகர்கின்றன. இப்போது கடற்கரைகளில் மின்விளக்குகள் மிகுந்துள்ளதால் குழம்பிவிடுகின்றன. பல நூற்றாண்டுகளாகச் சென்னைக் கடற்கரையில் பங்குனித் திங்களின்போது ஆயிரக்கணக்கில் இவ்வாமைகள் முட்டையிடுகின்றன. அதனால் இவ்வாமையை பங்குனி ஆமை என்று அழைக்கின்றனர்.[5]

ஆமை பற்றிய சங்கநூல் செய்திகள்[தொகு]

ஆமை முட்டை கோடு போட்டு ஆடும் வட்டு விளையாட்டு வட்டினைப் போல் உருண்டையாக இருக்கும். சினையுற்ற பெண் ஆமை முட்டையை மணலில் இட்டுப் புதைத்துவிட்டுச் செல்லும். அந்த முட்டைகளை அந்தப் பெண் ஆமையின் கணவனாகிய ஆண் ஆமை முடை குஞ்சாகும் வரையில் பாதுகாக்கும்.[6] [7] முட்டையிட்ட ஆமை தன் குஞ்சுகளைப் பேணும். [8] ஆமைக் குஞ்சு ஒன்றொன்றாகத் தனித்தனியே ஓடிவிடும். [9] ஆமைக் குஞ்சுகளும் நண்டு போல் வளையில் பதுங்கிக்கொள்ளும். [10] ஆமை முட்டை சேற்றில் கிடக்கும். [11] நன்செய் வயலில் உழும்போது ஆமை புரளும் [12]

ஆமை தன் கால் 4, தலை 1, ஆகிய ஐந்தையும் தன் வலிமையான ஓட்டுக்குள் அடக்கிக்கொள்ளும். [13] ஆமை தடாரிப் பறை போலவும், [14] கிணை பறை போலவும் [15] இருக்கும். அதன் வயிறு கொக்கைப் பிளந்து வைத்தாற்போல வெண்மையாக இருக்கும். [16] ஆமையின் கால்கள் வளைந்திருக்கும். அது பொய்கையில் விழுந்த மாம்பழத்தைத் தன் குட்டிகளோடு சேர்ந்து உண்ணும். [17] ஆமை வள்ளைக்கொடி படர்ந்த புதரிலும், ஆம்பல் பூத்த குளத்திலும் வாழும். பனைமரத்துக் கள்ளைக் குடித்துவிட்டுத் தள்ளாடுபவன் போல மெல்ல மெல்ல ஆடி ஆடி நடக்கும். [18] வெயில் தாங்கமாட்டாத ஆமை குளத்தை நாடும். [19]

ஆமையை நீரில் போட்டுக் கொதிக்க வைத்துச் சமைப்பர். [20] ஆமையை “நீராடிவிட்டு வா” என்று குளத்தில் விட்டால் திரும்ப வருமா? [21] நெல் அறுக்கும் உழவர் தன் அறுவாளை ஆமை முதுகில் தீட்டிக்கொள்வர். [22] ஆமை முதுகில் நந்துச் சிப்பிகளை உடைத்து உழவர் உண்பர். [23] குறளன் ஒருவன் ஆமையைத் தூக்கி நிறுத்தினாற்போல இருந்தானாம். கலித்தொகை 94-31

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.fws.gov/northflorida/SeaTurtles/Turtle%20Factsheets/olive-ridley-sea-turtle.htm
 2. சென்னைப்பல்கலைக்கழகம் (1924-1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். பக். s119. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.13:1:3065.tamillex. 
 3. http://www.nmfs.noaa.gov/pr/pdfs/recovery/turtle_oliveridley.pdf
 4. சென்னைப்பல்கலைக்கழகம் (1924-1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். பக். 2617. http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.8:1:5376.tamillex. 
 5. "120 கடல் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன". தினமலர் (புதுச்சேரி). 2012-05-07. http://tamil.yahoo.com/120-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-212700681.html. பார்த்த நாள்: நவம்பர் 24, 2012. 
 6. நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று, புதைத்த
  கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை
  பார்ப்பு இடன் ஆகும் அளவை, பகுவாய்க்
  கணவன் ஓம்பும் கானல்அம் சேர்ப்பன்: (அகநானூறு 160)
 7. ஆமைக் குஞ்சுகள் தன் தந்தை ஆமைமேல் ஏறி உறங்கும் அம்பணத்து அன்ன யாமை ஏறி,
  செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும் (ஐங்குறுநூறு 43)
 8. ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் (பொருநராற்றுப்படை 186)
 9. யாமைப் பார்ப்பின் அன்ன காமம், காதலர் கையற விடினே (குறுந்தொகை 152)
 10. நற்றிணை 385
 11. புறநானூறு 176-3,
 12. புறநானூறு 42-14,
 13. திருக்குறள் 126
 14. புறநானூறு 249-4,
 15. அகநானூறு 356-2,
 16. ஐங்குறுநூறு 81
 17. அகநானூறு 117-16,
 18. பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பில
  மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை
  நொடி விடு கல்லின் போகி, அகன்துறைப்
  பகுவாய் நிறைய, நுங்கின் கள்ளின்
  நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு
  தீம் பெரும் பழனம் உழக்கி, அயலது
  ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் (அகநானூறு 256-2)
 19. அகநானூறு 361-11
 20. நாலடியார் 331-1
 21. பழமொழி 263-3
 22. புறநானூறு 379-5,
 23. நற்றிணை 280
"http://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றாமை&oldid=1373408" இருந்து மீள்விக்கப்பட்டது