சிறு தொண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறு தொண்டு என்பது ஒருதன்னார்வப் பணியின் சிறு பகுதி ஒன்றை நிறைவேற்றுவது ஆகும். பலருக்கு நீண்ட நேரம் தொடர்ச்சியான பங்களிப்புச் செய்வது கடினமாக இருக்கலாம். ஆனால் பங்களிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கலாம். அதே போன்று சிறு சிறு பங்களிப்பை வேண்டும் தேவைகளும், தன்னார்வலர் திட்டங்களிடம் உள்ளன. இந்த இரண்டையும் தொடர்புறுச் செய்யும் ஒரு பணி முறையே சிறு தொண்டு ஆகும். பலர் வெவ்வேறு இடங்களில் இருந்து வெவ்வேறு நேரங்களில் சேர்ந்தியங்க உதவும் இணையத் தொழில்நுட்பங்கள் சிறு தொண்டுகள் செய்ய உதவுகின்றன. ஒரு வேலைத்திட்டம் பல கூறுகளாகப் பிரிக்கப்பட்டு, பின்னர் அந்த வேலைத்திட்டம் தன்னார்வலர்களிடம் எடுத்துச்செல்லப்படுகிறது. தன்னார்வலர்கள் அந்த வேலைத்திட்டத்தை சிறுகப் சிறுக நிறைவேற்ற, பின்ன அந்த வேலைத்திட்டத்தின் கூறுகள் ஒன்றுசேர்க்கப்பட்டு, அந்த வேலைத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இதற்கான தகுந்த வழிமுறைகள் தற்போது மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

எடுத்துக்காட்டுக்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_தொண்டு&oldid=649700" இலிருந்து மீள்விக்கப்பட்டது