சிறுமுது அறிஞர்
சிறுமுது அறிஞர் (child prodigy) என்போர் சிறிய வயதிலேயே பெரியவர்களுக்குண்டான அறிவும் திறமையும் கைவரப்பெற்றோர் ஆவர். [1]அதிகப் பயிற்சி தேவைப்படும் துறையில் மிகத்தேர்ந்த பெரியவரின் திறமையைத் தன் செயலில் காட்டும் 10 வயதிற்குட்பட்ட குழந்தையை சிறுமுது அறிவர் என்று சொல்லலாம் என ஒரு வரையறை கூறுகிறது.[1][2]
பரவலர் ஊடகங்களில் இத்தகைய திறன் உடையோரை அதிசயக் குழந்தை அல்லது சாகசக் குழந்தை என்று கூறுவர்.
இசைத்துறையில் மொசார்ட், சதுரங்கத்தில் பால் மர்ஃபி, கணிதத்தில் காஸ் மற்றும் நியூமான், கலைத்துறையில் பாபுலோ பிக்காசோ ஆகியோர் சிறுமுது அறிவர்கள் ஆவர். [3]அதுமட்டுமன்றி இவர்கள் பெரியவர்கள் ஆன பின்னும் தங்கள் திறமையைத் தக்க வைத்துக் கொண்டனர். ஆனால் பெரும்பாலான சிறுமுது அறிவர் தங்கள் காலம் செல்லச் செல்ல தங்கள் திறமையை இழந்து விடுவதும் உண்டு.
தமிழ்ப் புலவோர் பலரும் சிறுமுது அறிவராய்த் திகழ்ந்தனர்[சான்று தேவை]
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Rose, Lacey. "Whiz Kids". Forbes. http://www.forbes.com/2007/02/25/child-prodigies-biographies-lead_achieve07_cx_lr_0301prodigy.html. Retrieved 2009-06-07.
- ↑ Feldman, David H: "Child Prodigies: A Distinctive Form of Giftedness", National Association for Gifted Children, Gifted Children Quarterly., 1993, 37(4): 188-193.
- ↑ Charles McGrath (2006-01-28). "Philosopher, 65, Lectures Not About 'What Am I?' but 'What Is I?'". The New York Times. http://www.nytimes.com/2006/01/28/books/28krip.html?pagewanted=1&ei=5088&en=9b8c06355a8dc486&ex=1296104400&adxnnl=0&partner=rssnyt&emc=rss&adxnnlx=1156068875-xI9kVaL9WqHJhRK5STWHrw. Retrieved 2008-01-23.