சிறுபஞ்சமூலம் பழைய உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பண்டைத் தமிழர் எழுதிய நூல்கள் பெரும்பாலும் பாடல்களாகவே அமைந்திருந்தன. பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர். அவற்றில் பழமையான உரைகள் 1200 – 1500 ஆம் ஆண்டுக்கால இடைவெளியில் தோன்றியவை. [1]

சிறுபஞ்ச மூலம் நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு. உரை ஆசிரியர் பெயர் தெரியவில்லை. [2]

சிறுபஞ்ச மூலம் நூலை இயற்றியவர் சைனர். இதற்குப் பழைய உரை எழுதிய ஆசிரியரும் சைனர் எனத் தெரிகிறது. ஒவ்வொரு பாடலிலும் கூறப்பட்டுள்ள கருத்துகள் ஐந்து என்பதைப் பகுத்துணருமாறு உரை தெளிவாக அமைந்துள்ளது.

இந்த உரைநூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. டாக்டர். மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு.
    • 1875 கொ. சண்முக முதலியார் பதிப்பு
    • 1944 வையாபுரிப் பிள்ளை பதிப்பு