சிறுக்குளம்

ஆள்கூறுகள்: 9°22′06″N 77°59′08″E / 9.368281°N 77.985592°E / 9.368281; 77.985592
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறுகுளம்
—  கிராமம்  —
சிறுகுளம்
இருப்பிடம்: சிறுகுளம்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°22′06″N 77°59′08″E / 9.368281°N 77.985592°E / 9.368281; 77.985592
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விருதுநகர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் வீ ப ஜெயசீலன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

சிறுகுளம் (ஆங்கிலம் :Sirukulam) இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊர்.[4] [5]

இவ்வூரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் புகழ்மிக்க இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. இவ்வூர் மக்களின் முதன்மைத் தொழில் வேளாண்மை ஆகும்.இவ்வூரில் பெரிய கண்மாய், சின்ன கண்மாய் , வண்ணாங்கிணறு போன்ற நீர் பிடிப்புப்பகுதிகள் உள்ளன. சிறுகுளம், மேலச்சிறுகுளம், மம்சாபுரம், அப்பனேரி என்ற நான்கு சிற்றூர்களை உள்ளடக்கியது சிறுகுளம் ஊராட்சி. ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சிறுகுளம் கிராமத்தில் உள்ளது. மேலச்சிறுகுளத்தில் ஒரு ஆரம்பப்பள்ளியும் மம்சாபுரத்தில் ஒரு ஆரம்பப்பள்ளியும் உள்ளது. கண்மாயை முக்கிய நீராதரமாக கருதி நெல் பயிரிட்டு வந்த மக்கள் தற்போது கால்வாயில் நீர்வரத்து குறைந்தபடியால் புன்செய் பயிர்களையும் சில சமயங்களில் பயிரிடாமலும் கிடப்பில் போட்டு வைக்கிறார்கள். கண்மாய்களுக்கான நீர் கோல்வார்பட்டி அணையிலிருந்து பெறப்படுகிறது. கோல்வார்பட்டி அணைக்கு நீராதாரம் வத்திராயிருப்பு அணையிலிருந்து வருகிறது. இது மேற்குத் தொடர்ச்சி மலைகளை நம்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு[தொகு]

சிறுகுளம் என்பது முதலில் ஆலங்குளம் என்ற பெயருடன் இருந்ததாகவும். பெரிய கண்மாயின் படித்துறைப்பகுதியில் ஒரு கல்வெட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. அது தற்போது எங்கு போனது என்ற விவரம் தெரியவில்லை. 1960களில் பல ஊர்க்கட்டுப்பாடுகள் கடுமையாக இருந்ததாக சொல்லப்படுகிறது. மது அருந்திவிட்டு ஊருக்குள் யாரும் வரக்கூடாது. அப்படி வந்தால் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதனால் மது அருந்தியவர்கள் வெளியூர்களில் அல்லது ஊருக்கு வெளியே உறங்கிவிட்டு காலையில் ஊருக்குள் காலடி எடுத்து வைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. இங்கு பல பருத்தி வணிகர்கள் இருந்தார்கள் அவர்கள் வெளியூர்களுக்கு சென்று பருத்தி கொள்முதல் செய்து சாத்தூர் நகரத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்வார்கள். இன்றும் அது வழக்கத்தில் உள்ளது. இங்கு பானை வனையும் குயவர்கள் தங்கள் தொழிலை 1960 - 1985 மிக சிறப்பாக செய்திருக்கிறார்கள். சங்க கட்டிடம் அமைத்து ஒற்றுமையுடன் பானைகளை செய்து சுற்றுவட்டார ஊர்களுக்கு சென்று விற்றிருக்கிறார்கள். இருக்கன்குடி ஆடித்திருவிழா சமயத்தில் பானை செயபவர்களின் வீடுகளில் இரவெல்லாம் பானை தட்டும் சத்தம் கேட்கும் என்று அங்குள்ள பெரியவர்கள் சொல்கிறார்கள். காலப்போக்கில் பிளாஸ்டிக் மற்றும் உலோக பாத்திரங்களின் வரவால் பானை வனைதல் மங்கி போனதால் மக்கள் கட்டிடவேலைகளுக்கும் காட்டு வேலைகளுக்கும் செல்லதொடங்கினர். தற்போதும் ஒன்றிரண்டு குயவர்கள் பானை செய்துகொண்டிக்கிறார்கள். யாதவ சமூகத்தை சேர்ந்த மக்கள் பழங்காலம் தொட்டு ஆட்டுக்கிடைகளை பாதுகாத்து பேணி அதிலிருந்து தங்கள் பொருளாதாரத்தேவைகளை பூர்த்தி செய்துகொண்டிருந்திருக்கிறார்கள். இன்று சில குடும்பங்களை தவிர மற்றவர்கள் பிறதொழில்களில் ஈடுபடுகிறார்கள். இதை தவிர மருத்துவர் சமூகத்தினரும்,வண்ணார் சமூகத்தினரும் தங்கள் தங்கள் தொழில்களை செய்து, ஊரில் எந்த உயர்வு தாழ்வு பேதமின்றி வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-02.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-04-02.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுக்குளம்&oldid=3554447" இலிருந்து மீள்விக்கப்பட்டது