சிறப்பு எக்சு கதிர் குழாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்பு எக்சு கதிர்க் குழாய் அல்லது கிரிட் கட்டுப்பாட்டு எக்சு கதிர்க் குழாய் (Grid controlled x ray tube) என்பது சில குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டி அமைக்கப்பட்ட எக்சு-கதிர்க் குழாய் ஆகும்.

கிரிட் கட்டுப்பாட்டு குழாய்கள், மிகவும் குறைந்த கால அளவு கதிர்களைப் பாய்ச்சி கதிர்படம் எடுக்க உதவுகின்றன. இப்படிப் பட்ட குழாய்களில் சிறப்பாக அமைக்கப்பட்ட குவிக்கும் கோப்பையும் எதிர் முனையுடன் ஒப்பிடும் போது சில வோல்ட் எதிர் மின் அழுத்தமும் கொண்ட வலைப்பின்னல் (கிரிட்) அமைக்கப்பட்டுள்ளது. கிரிட் மின் அழுத்தத்தினை மாற்றினால் மட்டுமே கதிர்கள் தோன்றும். இப்படிப்பட்ட கருவியுடன் ஒரு மைக்ரோ செகண்ட் கால அளவினைத் தேர்ந்து எடுக்க முடியும். குருதிக்குழாய் ஆய்விற்கும் திரைப் படங்களாகப் படங்களைப் பெறுவதற்கும் இது போன்ற கருவிகள் தேவைப்படுகின்றன.