சிரச தொலைக்காட்சி
![]() |
|
| வகை | ஒளிபரப்பாக்கம் |
|---|---|
| நாடு | இலங்கை |
| பரப்பு | |
| உரிமையாளர் | மகாராஜா கூட்டு நிறுவனம் |
| இணையதளம் | http://www.sirasatv.lk/ |
சிரச தொலைக்காட்சி (Sirasa TV, சிரச டிவி) இலங்கையில் சிங்கள மொழியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிச் சேவையாகும். 1998, சூன் 10 இல் ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை மகாராஜா கூட்டு நிறுவனத்தின் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான சனல் வன் எம்.டி.வி, சக்தி தொலைக்காட்சி என்பன முறையே ஆங்கில, தமிழ் சேவைகளை வழங்குகின்றன.
நாடகங்கள், கருத்தாடல்கள் போன்ற பல்வேறு சிங்கள மொழி நிகழ்ச்சிகளுடன் இசை நடன நிகழச்சிகளையும் தயாரித்து ஒளிபரப்பி வருகின்றது. விளையாட்டு நிகழ்ச்சிகளையும் இந்திப் பாடங்களை சிங்கள உப தலைப்புகளுடனும் இந்தி மற்றும் தமிழ் நாடகங்களை மொழி மாற்றம் செய்தும் ஆங்கில நிகழ்ச்சிகளை சிங்கள மொழியில் மொழி மாற்றம் செய்தும் ஒளிபரப்பி வருகிறது. முக்கிய செய்திகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
சிங்கள மொழி பேசும் ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்குச் சேவையாக இது அமைந்துள்ளது.
[தொகு] வெளி இணைப்புகள்
|
|||||
