சிம்மளதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிம்மளதேசம் ( சிங்கள தேசம்) பாண்டியதேசத்திற்கு கிழக்கிலுள்ள இராமேசுவரத்திற்கு வெகு தொலைவில் நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட விசாலமான பூமியில் பரவி இருந்த, இருக்கிற தேசம்.[1]

இருப்பிடம்[தொகு]

இந்த சிம்மள( சிங்கள தேசம்)தேசத்தில் பூமி வடக்கே குருகலாகவும், தெற்கே அகன்றும், நடுவில் உயர்ந்தும், கடல் ஓரங்களில் சரிந்தும் மேடும், பள்ளமும், காணப்படும்.[2]

மலை, காடு, விலங்குகள்[தொகு]

இந்த தேசத்தில் நிறைய மலைகள் உண்டு, இவற்றில் சிம்மகிரி என்பதே மிகவும் உயரமானது. சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமி அதிகமாகவும் இருக்கும். இம்மலையிலிருந்து வேணா என்னும் நதி கிழக்குமுகமாய் ஓடி கிழக்குக் கடலுடன் இணைகிறது.

நதிகள்[தொகு]

இந்த சிம்மள( சிங்கள தேசம்) தேசத்தில், சிம்மகிரி என்ற மலையில் உற்பத்தியாகும் வேணா நதி சிம்மள( சிங்கள தேசம்)தேசத்தை செழிக்க வைக்கின்றது.[3]

வேளாண்மை[தொகு]

இந்த சிம்மள( சிங்கள தேசம்)தேசத்தில் நெல், வாழை, கரும்பு, போன்ற பயிர்களும் விளைகின்றது.

சிறப்பு[தொகு]

இந்த சிம்மள( சிங்கள தேசம்)தேசத்தில், வேணா நதி கடலில் கலக்குமிடத்தில் அழகிய வெண்முத்துக்கள் சிறப்பு வாய்ந்த தாகும்.[3]

கருவி நூல்[தொகு]

சான்றடைவு[தொகு]

  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 273 -
  3. 3.0 3.1 புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 270-
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிம்மளதேசம்&oldid=3717484" இலிருந்து மீள்விக்கப்பட்டது