சின்னஞ்சிறியதே அழகானது (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Small Is Beautiful
நூலாசிரியர் (கள்) ஈ. எஃப். ஷூமேக்கர்
பாணி அபுனைவு
பதிப்பாளர் புளொண்ட், மற்றும் பிரிக்ஸ்
பதிப்புத் திகதி
பக்கங்கள் 288 பக்.
ஐஸ்பிஎன் சுட்டெண் 978-0060916305
OCLC 19514463

சின்னஞ்சிறியதே அழகானது: மனிதனை முன்னிறுத்தும் பொருளாதாரம் (Small Is Beautiful: Economics As If People Mattered), என்பது பிரித்தானிய பொருளியல் வல்லுனர் ஈ. எஃப். ஷுமேக்கர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.

உலகத்திலிருக்கும் ஏழைகளுக்கு பெருந்தொழில் உற்பத்தி (Mass production) தேவையில்லை.பெருமளவு மக்கள் பங்கேற்கும் பொருள் உற்பத்தியே (Production by masses) அவர்களுக்குத் தேவை என்பதை வலியுருத்துகிறார்.

சின்னஞ்சிறியதே அழகானது எனும் சொல்லாடலை, பெருமூலதனமும் உயரிய தொழில்நுட்பமுமே மானுடத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்ற மாயயை தகர்க்கப் பயன்படுத்துகிறார். ஆற்றல் பற்றாக்குறை, புவி வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வு எழ ஆரம்பித்த காலமாதலால், 1973ம் ஆண்டு வெளிவந்த முதற்பதிப்பு மேற்கத்திய பொருளாதார மேதைகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. வாதங்களும் எதிர் வாதங்களும் முன்னெடுத்து வைக்கப்பட்டன. 'The Times literary supplement' (தி டைம்ஸ் லிட்டெரி சப்பலிமென்ட்) இதழ் 'சின்னஞ்சிறியதே அழகானது' நூலை இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தய காலகட்டத்தில் வந்த வெளியீடுகளில் சமூகத்தின் சிந்தனை ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த 100 நூல்களில் ஒன்றாக வரிசைப்படுத்தியது.

வெளி இணைப்புகள்[தொகு]