சின்த்தோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொரீ எனப்படும் சின்த்தோ கோவிலின் கதவு
சின்த்தோ (அல்லது ஷிண்டோ) என்பது சப்பானிய நாட்டில் பின்பற்றப்படும் ஒரு மதம். இது கடவுளின் வழி எனப்பொருள் படும் சப்பானிய மொழிச் சொல்லாகும்(சின் - கடவுள், தோ-வழி). இது முற்காலத்தில் அரச ஏற்புப் பெற்ற மதமாகவும் இருந்தது. இம்மதம் பல கடவுள் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் வரை இதுவே சப்பானின் முதன்மையான மதமாக விளங்கியது.