சினாபுங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சினாபுங் | |
|---|---|
| Gunung Sinabung | |
1987 இல் சினாபுங் |
|
| உயரம் | 2 மீ (8,071 அடி) |
| பட்டியல் | ரைபு |
| இட அமைவு | |
|
சுமாத்திரா, |
|
| ஆயக்கூறுகள் | அமைவு: |
| புவியியல் | |
| வகை | stratovolcano |
| பாறையின் வயது | Pleistocene |
| கடைசி வெடிப்பு | 29 ஆகத்து 2010 |
சினாபுங் (Sinabung, இந்தோனேசியம்: Gunung Sinabung) என்பது இந்தோனேசியாவின் சுமாத்திராப் பகுதியில் அமைந்துள்ள ஒரு எரிமலை ஆகும். மெதான் என்ற சுமாத்திராவின் முக்கிய நகரத்தில் இருந்து தென்மேற்கே 60 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த எரிமலை வெடித்ததற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் இது கடைசியாக 2010, ஆகத்து 29 இல் வெடிக்கும் வரை பதியப்பட்டிருக்கவில்லை[1].
ஆகத்து 2010 வெடிப்பு [தொகு]
இந்த எரிமலை 1600 ஆம் ஆண்டில் இருந்து சீற்றமடையாமல் இருந்து வந்துள்ளது[2]. கடைசியாக இது 2010 ஆகத்து 29 அதிகாலையில் உள்ளூர் நேரப்படி 00:06 மணிக்கு வெடிக்க ஆரம்பித்தது. 1.5 கிமீ உயரத்திற்கு இதன் தூசுகள் வீசப்பட்டன. குழம்புகள் எரிமலைவாயில் வீழ்ந்தன[3].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Mount Sinabung in Sumatra erupts". ஜகார்த்தா போஸ்ட்]]. பார்த்த நாள் 2010-08-29.
- ↑ "Volcano quiet for 400 years erupts in Indonesia". அசோசியேட்டட் பிரஸ் (2010). பார்த்த நாள் 2010-08-28.
- ↑ "Volcano erupts on Indonesia's Sumatra after 400 years". ராய்ட்டர்ஸ் (2010). பார்த்த நாள் 2010-08-29.
விக்கிசெய்தியில்
தொடர்பான செய்திகள் உள்ளது.