சிட்னி மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சிட்னி மொழி | ||
|---|---|---|
| நாடுகள்: | நியூ சவுத் வேல்ஸ், |
|
| மொழி அழிவு: | {{{அழிவு}}}19ம் நூற்றாண்டின் கடைசி/20ம் நூற்றாண்டின் முற்பகுதி | |
| மொழிக் குடும்பம்: | பாமா-நியூங்கன் யூவின்-கியூரிக் சிட்னி மொழி |
|
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | aus | |
| ISO/FDIS 639-3: | — | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
சிட்னி மொழி (Sydney Language) ஆஸ்திரேலியப் பழங்குடிகளின் ஓர் அழிந்த மொழியாகும். இது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி நகரில் பேசப்பட்டு வந்தது. இம்மொழி தாருக் மொழி எனவும் அழைக்கப்படுகிறது.
இம்மொழியைக் கடைசியாகப் பேசியவர் 19ம் நூற்றாண்டின் கடைசி அல்லது 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இம்மொழி பேசிய தாருக் மக்களின் இனம் ஆங்கிலேயர்களின் குடியேற்றத்தை அடுத்து குறைந்து முற்றாக அழிந்து போயிற்று[1].
இன்று பிற மொழிகளில் வழக்கிலேறி வாழும் சில சொற்கள்[தொகு]
இன்று ஆங்கிலத்தில் வழக்கிலுள்ள சில தாருக் மொழி சொற்கள் வருமாறு:
- விலங்குகளின் பெயர்கள்: டிங்கோ, கோவாலா, வாலபி
- மரங்களும் தாவரங்களும்: புராவாங்கு (burrawang), குராசோங்கு (kurrajong), வராட்டா
- ஆயுதங்கள்: பூமராங், வூமெரா[2]
- இடங்கள்: மல்கோவா, டூன்காபி, வின்மாலி
குறிப்புகள்[தொகு]
- ↑ Troy (1994): p. 5.
- ↑ boomerang.org.au; see under "The Origin of Boomerang". Retrieved 16 January 2008.
மேற்கோள்கள்[தொகு]
- Troy, Jakelin (1994). The Sydney Language. Canberra: Panther. ISBN 0 646 110152.