சிட்டு (விடுதலைப் புலி உறுப்பினர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேஜர் சிட்டு
மேஜர் சிட்டு
பிறப்புசிற்றம்பலம் அன்னலிங்கம்
(1971-11-04)நவம்பர் 4, 1971
மருதங்கேணி, யாழ்ப்பாணம், இலங்கை
இறப்புஆகத்து 1, 1997(1997-08-01) (அகவை 25)
தேசியம்ஈழத்தமிழர்
பணிபுலிகளின் போராளி. கலைஞர்
பெற்றோர்சிற்றம்பலம், சின்னப்பிள்ளை

மேஜர் சிட்டு (4 நவம்பர் 1971 – 1 ஆகத்து 1997) விடுதலைப் புலிகளின் இசைக் கலைஞர். போராளி.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மெல்லிசைப் பாடகர் கே. எஸ். பாலச்சந்திரனின் இளைய சகோதரன். இவர் அண்ணாவியார் பரம்பரையைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் கோவில் பூசகராகவும் நாடகக்கூத்துக் கலைஞராகவும் இருந்தார். ஆகவே, சிட்டுவுக்கும் இவரது சகோதரர்களுக்கும் இசை இயல்பாகவே வந்தது.

இவர் யாழ். மாவட்ட கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளராகவும் பின்னர் புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளராகவும் இருந்தார்.[1][2]

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த 'கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்' என்ற பாடல் இவர் முதலில் பெயர் பெறக் காரணமாக அமைந்தது. இப்பாடலை மேஜர் செங்கதிர் எழுதியிருந்தார்.[3] தொடர்ந்த காலங்களில் கேணல் கிட்டுவின் நினைவாக அவசரமாக உருவாக்கப்பட்டு, இரு நாட்களுள் வெளிவந்த பாடலான 'கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா' என்ற பாடல் மூலம் இவர் பிரபலமானார். குரல் வளத்தினால் புகழ்பெற்றார். தமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட 'உயிர்ப்பூ' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சின்னச் சின்னக் கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்' என்ற பாடலும் இவருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. இவர் 'கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்' பாடலில் தொடங்கி 'சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்' பாடல்கள் வரை 75 பாடல்களைப் பாடியுள்ளார்.

1997 ஆகத்து 1 இல் ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக ஓமந்தைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் வீர்ச்சாவடைந்தார்.[4][5][6] இவரது வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது.

இவர் பாடிய பாடல்களில் சில[தொகு]

  • கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்
  • சின்னச் சின்னக் கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்..
  • சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஈழநாதம் பத்திரிகை (22.05.1992)". https://tamileelamarchive.com/wp-content/uploads/2019/09/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-1992.05.22-friday.pdf. 
  2. "களத்தில் இதழ் 159 (22.04.1998)". https://tamileelamarchive.com/wp-content/uploads/2020/05/Kalathil159.pdf. 
  3. http://thesakkatru.com/doc3166.html[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 2015-03-16.
  5. "மேஜர் சிட்டுவின் நினைவு நாள் இன்று 01-08-1997 - யாழ். இணையம்". https://yarl.com/forum3/topic/89794-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-01-08-1997/. 
  6. "காற்றுள்ள வரை வாழும் காவியம் மேஜர் சிட்டு - யாழ். இணையம்". https://yarl.com/forum3/topic/143780-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/. 

வெளி இணைப்புகள்[தொகு]