சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம்

ஆள்கூறுகள்: 22°21′20.89″N 91°46′04.51″E / 22.3558028°N 91.7679194°E / 22.3558028; 91.7679194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம்
அரங்கத் தகவல்
அமைவிடம்சிட்டகொங்
இருக்கைகள்25,000
உரிமையாளர்சிட்டகொங் கோட்டம்
இயக்குநர்வங்காளதேசம், சிட்டகொங் கோட்டம்
முடிவுகளின் பெயர்கள்
இசுபானி முனை
யூசிபி முனை
பன்னாட்டுத் தகவல்
முதல் தேர்வு28 பிப்ரவரி - 3 மார்ச்சு 2006:
 வங்காளதேசம் v  இலங்கை
கடைசித் தேர்வுமார்ச்சு 12–16 2010:
 வங்காளதேசம் v  இங்கிலாந்து
முதல் ஒநாப25 பிப்ரவரி 2006:
 வங்காளதேசம் v  இலங்கை
கடைசி ஒநாபமார்ச்சு 5 2010:
 வங்காளதேசம் v  இங்கிலாந்து
3 ஏப்ரல் 2010 இல் உள்ள தரவு
மூலம்: Chittagong Divisional Stadium, Cricinfo

சிட்டகொங் கோட்ட விளையாட்டரங்கம்(Chittagong Divisional Stadium), தற்போது சோகுர் அகமது சௌத்ரி அரங்கம் (Zohur Ahmed Chowdhury Stadium) என்றும் முன்பு பீர் சிரேசுதா சாகித் ருகுல் அமீன் அரங்கம்(Bir Shrestha Shahid Ruhul Amin Stadium) என அறியப்பட்டது, வங்காள தேசத்தின் தென்கிழக்கில் உள்ள சிட்டகொங் நகரில் அமைந்துள்ள ஓர் விளையாட்டரங்கமாகும். பிப்ரவரி 27, 2006 இல் இலங்கைக்கும் வங்காளதேசத்திற்கும் இடையே நடந்த தேர்வுத் துடுப்பாட்டம் மூலம் தேர்வுத் துடுப்பாட்ட அரங்கமானது.

சிட்டகொங் நகரத்திலிருந்து அரைமணிநேர பயணத்தில் அமைந்துள்ள இந்த அரங்கம் 2004ஆம் ஆண்டு 19-கீழ் உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக கட்டப்பட்ட ஐந்து மைதானங்களில் ஒன்றாகும். சனவரி, 2006இல் பன்னாட்டுத் தரமுள்ள அரங்கமாக ஒப்புமை வழங்கப்பட்டது. வேளாண் நிலங்களின் மத்தியில் திண்காறை கட்டிடமாக விளங்கும் இந்த அரங்கத்தில் மூன்று அடுக்குகளில் அமைந்துள்ள 20,000 கொள்ளளவு கொண்ட பார்வையாளர் இருக்கைகள் அமைந்துள்ளன.