சிங்கைநகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிங்கைநகர் என்ற இடப்பெயர் ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணத்து அரசர் சிலரின் பெயர்களுடன் சேர்த்து வழங்கப்பட்டு வந்தது. எடுத்துக்காட்டாக கனகசூரிய சிங்கையாரியன் என்ற பெயரைக் கவனிக்கவும். தென்னிலங்கையிலுள்ள கோட்டகம என்னும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டொன்றில், ".... சிங்கைநக ராரியனைச் சேராவனுரேசர்..." என்ற தொடர் வருகிறது. இவற்றை வைத்து, யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசித் தலைநகரமான நல்லூருக்கு முன்னர் சிங்கைநகர் என்ற இன்னொரு நகரம் தலைநகரமாக இருந்ததாகச் சில ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையோரமாக அமைந்துள்ள இடமான வல்லிபுரம் என்ற இடமே இது என்றும் அவர்களிற் சிலர் அடையாளம் காணுகின்றனர். இவ்விடத்தில் பழங்காலத்தில் கட்டிடங்கள் இருந்ததற்கான தொல்பொருள் சான்றுகளை வைத்தும், முன்னர் குறிப்பிடப்பட்ட கல்வெட்டில், "பொங்கொலி நீர்ச் சிங்கைநகர்" எனச் சிங்கைநகருக்கு அடைமொழி தரப்பட்டிருப்பதால், இந்நகரம், பொங்கி ஒலிக்கின்ற அலைகளோடு கூடிய கடற்கரையில் அமைந்திருந்திருக்க வேண்டுமென்ற அடிப்படையிலும் இக் கருத்து முன்வைக்கப் படுகின்றது.

சிங்கைநகர் என்பது நல்லூரே என்பது இன்னொரு சாரார் கருத்து. கலாநிதி கா. இந்திரபாலா போன்றோர் இக்கருத்தை வலியுறுத்தி வந்தனர். யாழ்ப்பாண வைபவமாலை போன்ற யாழ்ப்பாண வரலாற்று நூல்களும் நல்லூர் தவிர்ந்த இன்னொரு நகரம் தலைநகரமாயிருந்தது பற்றிப் பேசவில்லை.

மிக அண்மைக்காலத்தில் சிலர் சிங்கை நகரத்தைக் குடாநாட்டுக்கு வெளியே அடையாளம் காணவும் முயன்றுவருகின்றனர்.

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கைநகர்&oldid=722226" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி