சிங்கப்பூர் வான்வழி
|
||||
| நிறுவல் | 1947 (மலேசியன் ஏர்லைன்சு) | |||
|---|---|---|---|---|
| வான்சேவை மையங்கள் | சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் | |||
| அடிக்கடி பறப்பவர் திட்டம் | KrisFlyer PPS Club |
|||
| வானூர்தி நிலைய ஓய்விடம் | Silver Kris Lounge | |||
| வான்சேவைக் கூட்டமைப்பு | இசுடார் அலையன்சு | |||
| துணை நிறுவனங்கள் | சில்க் ஏர் | |||
| வானூர்தி எண்ணிக்கை | 110 (+55 orders) | |||
| சேரிடங்கள் | 61 | |||
| மகுட வாசகம் | A Great Way To Fly | |||
| தாய் நிறுவனம் | Temasek Holdings (54.39%)[1][2] | |||
| தலைமையிடம் | சிங்கப்பூர் | |||
| முக்கிய நபர்கள் | Chew Choon Seng (CEO) | |||
| இணையத்தளம் | http://www.singaporeair.com | |||
சிங்கப்பூர் வான்வழி என்பது சிங்கப்பூர் நகரநாட்டின் கொடி தாங்கும் விமான சேவை நிறுவனம் ஆகும். சிங்கப்பூர் சாங்கி பன்னாட்டு விமானநிலையத்தை மையம் கொண்டுள்ளது. இதற்கு கிழக்காசியா, தெற்காசியா, இங்கிலாந்து-ஆஸ்திரேலியத் தடங்கள் ஆகியவற்றில் நல்ல இருப்பு கொண்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய பயணிகள் வானூர்தியான ஏர்பசு எ 380 தன் முதல் வணிக நோக்கிலான பறப்பை சிங்கப்பூர் ஏர்லைன்சு மூலம் மேற்கொண்டது. அதன் துணை நிறுவனமான சில்க் வான்வழி சிறிய தடங்களில் செயல்படுகிறது . வருவாய், பிறப்புத் தொலைவு, பயணிகள் எண்ணிக்கை ஆகியவற்றில் உலகத்தில் 27வது பெரிய வான்வழி நிருவனமாக போர்ப்சு இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
பொருளடக்கம் |
வரலாறு [தொகு]
சிங்கப்பூர் வான்வழி மலாய் வான்வழி என்கிறப் பெயரில் முதலில் துவக்கப்பட்டது. சிங்கப்பூர் கோலாலம்பூர் இடையில் முதல் பறப்புகள் துவக்கப்பட்டன. சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்ததும் சிங்கப்பூர் வான்வழி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1970களில் இந்திய நகரங்களுக்கு பறக்கத் தொடங்கியது. போயிங்-747 ரக வானூர்திகள் அதன் அணிவரிசையில் சேர்க்கப்பட்டன. 1980களில் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நகரங்களுக்கு பறப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
தொடர்ப்பயணியர் திட்டம் [தொகு]
கிரிசுபிளையர்(KrisFlyer) மற்றும் பிபிஎசு கிளப்(PPSClub) என்கிற இரண்டு தொடர் பயணியர் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கிரிசுபிளையர் [தொகு]
இதில் மைல் புள்ளிகள் StarAlliance உறுப்பினர் வான்வழிகள் மற்றும் அறைவிடுதிகளிலிருந்து சேர்க்கப்படுகிறது.
பிபிஎசு கிளப் [தொகு]
Priority Passenger Service (PPS) முதல் வகுப்பு (First Class) அல்லது வணிக வகுப்பு (Business Class) பறப்புகளிலிருந்து சேர்க்கப்படுகிறது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "List of Major Shareholders". Singapore Airlines. பார்த்த நாள் 2009-03-04.
- ↑ "Singapore Airlines Annual Report 07/08" 88, 171. Singapore Airlines. பார்த்த நாள் 2009-03-04.
வெளி இணைப்புகள் [தொகு]
- சிங்கப்பூர் வான்வழி (ஆங்கிலம்)