சிக்கல் (ஊர்)

ஆள்கூறுகள்: 10°45′22″N 79°47′56″E / 10.756°N 79.799°E / 10.756; 79.799
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சிக்கற்பள்ளி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சிக்கல்
—  கிராமம்  —
சிக்கல்
இருப்பிடம்: சிக்கல்

, தமிழ் நாடு , இந்தியா

அமைவிடம் 10°45′22″N 79°47′56″E / 10.756°N 79.799°E / 10.756; 79.799
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
ஊராட்சி மன்ற தலைவர் ந.ஆனந்த்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


சிக்கல் (ஆங்கிலம்:Sikkal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில், நாகப்பட்டினம் வட்டத்தில், நாகப்பட்டினத்திற்கு பக்கத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமாகும். இதனை சிக்கற்பள்ளி என தமிழிலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[சான்று தேவை]

அமைவிடம்[தொகு]

நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் நாகப்பட்டினம் நகரில் இருந்து மேற்கே 6 கி. மீ. தொலைவிலும், திருவாரூர் நகரில் இருந்து கிழக்கில் 20 கி. மீ. தொலைவிலும், கீழ்வேளூர் ஊரில் இருந்து கிழக்கில் 6 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சிக்கல் சிங்காரவேலர் கோவில் மிகவும் புகழ் பெற்றது.[1] இங்கு சூரசம்கார விழா விமரிசையாக நடைபெறுகிறது. மேலும் சிக்கல் நவநீதேசுவரர் கோவில் சிவன் கோயிலும் அமைந்துள்ளது.[2]

பாடல் பெற்ற தலம்[தொகு]

திருஞான சம்பந்தர் இவ்வூரிலுள்ள 'வெண்ணெய்ப் பெருமான' (நவநீதேசுவரனை)ப் பாடியுள்ளார்.

மடங்கொள் வாளைகுதி கொள்ளும் மணமலர்ப் பொய்கைசூழ்
திடங்கொள் மாமறையோரவர் மல்கிய சிக்கலுள்
விடங்கொள் கண்டத்து வெண்ணெய்ப் பெருமானடி மேவிய
அடைந்துவா மும்மடி யாரவர் அல்லல் அறுப்பரே.

வரலாற்றுச் சிறப்பு[தொகு]

கருவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் இவ்வூருக்கு வந்து மருத்துவம் செய்துக்கொண்டதாக வரலாற்றில் உள்ளது.

நிர்வாகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-06-12. பார்க்கப்பட்ட நாள் 2018-06-27.
  2. "நவநீதேசுவரர் கோவில்". தினமலர்

வெளி இணைப்பு[தொகு]

தமிழ்நாடு அரசு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிக்கல்_(ஊர்)&oldid=3553749" இலிருந்து மீள்விக்கப்பட்டது