சார் மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சார் கொலோகோல்

சார் கொலோகோல் (tsar-kolokol) உலகின் மிகப் பெரிய மணி. ஆனால் இந்த மணி உடைந்த நிலையிலேயே காணப்படுவது. சார் மணி ரஷ்யாவின் தலைநகராகிய மொஸ்கோவிலுள்ள ரஷ்ய அதிபரின் உத்தியோகபூர்வ இடமான கிரெம்லினில் அமைந்துள்ளது. இம்மணி 1733-35 ஆம் ஆண்டளவில் வடிவமைக்கப்பட்டது. இதன்போது இந்த மணியானது மூன்று தடவைகள் புதுப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு தடவையின்போதும் அதிகளவில் உலோகங்கள் சேர்க்கப்பட்டன. இதன் நிறை 400.000 பவுண்ட் ( 180 தொன்கள) ஆகும். இதன் உயரம் 6.14 மீட்டர். அத்துடன் அதன் விட்டம் 6.6 மீட்டர்கள் ஆகும். இந்த மணியினை 200 இற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வடிவமைத்ததனர்.

1737 ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய தீ விபத்தின் காரணமாகவே இம்மணியில் ஒரு துண்டு உடைந்தது. இந்த உடைந்த துண்டின் எடை 11.5 தொன்களாகும். இதன் காரணத்தினால் இம்மணியானது ஒலிப்பதில்லை.


வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சார்_மணி&oldid=1358050" இருந்து மீள்விக்கப்பட்டது