சார்புக் கோட்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சார்பியல் கோட்பாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சார்புக் கோட்பாட்டில் குறிப்பிடப்படும் முப்பரிமாண வெளிநேர வளைவின், இருபரிமாண ஒப்புமை காட்சிப்படம்.
E=mc^2

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் இரு பெரும் கோட்பாடுகளான சிறப்புச் சார்புக் கோட்பாடு (Special Relativity) மற்றும் பொதுச் சார்புக் கோட்பாடு (General Relativity) ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து பொதுவாக சார்புக் கோட்பாடு (Theory of Relativity) என்று கூறப்படுகிறது.

சார்புக் கோட்பாடு பின்வரும் கருத்தாக்கங்களை அறிமுகப்படுத்துகிறது:

  • கணக்கிடப்படும் வெவ்வேறு அளவுகள், பார்வையாளரின் திசைவேகத்தைப் பொறுத்தே அமையும். குறிப்பாக, காலமும் வெளியும் விரிந்தோ சுருங்கியோ இருக்கலாம்.
  • வெளிநேரம்: வெளியும் காலமும் ஒருசேரவே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும்; ஒன்றைப் பொறுத்து மற்றொன்று அமையும்.
  • அனைத்து பார்வையாளர்களுக்கும் ஒளியின் வேகம் ஒரு மாறிலியாகும்.

சார்புக் கோட்பாடு அல்பர்ட் ஐன்ஸ்டீனால் முன்வைக்கப்பட்ட பிரபலமான கோட்பாடாகும். E = mc2 என்ற தனது சமன்பாட்டின் மூலம் மிகச் சிறிய துகள்களால் கூட மிகப் பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை ஐன்ஸ்டீன் உணர்த்தினார்.

மேலும் பார்க்க [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

சார்புக் கோட்பாட்டின் அடித்தளம் "ஒரு பொருளின் வேகம் மற்றொரு பொருளின் வேகத்தைச் சார்ந்தே அமையும்" என்பதாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சார்புக்_கோட்பாடு&oldid=1386017" இருந்து மீள்விக்கப்பட்டது