சாமை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சாமை | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Panicum sumatrense Roth ex Roem. & Schult. |
சாமை (Panicum sumatrense) ஒரு தானியம் ஆகும். இது ஒரு புன்செய் நிலப் பயிர். இது இந்தியாவிலும் விளைவிக்கப்படுகிறது.
உணவு [தொகு]
இந்த தானியத்தின் மாவு மூலம் ரொட்டி, புட்டு, கேக், பிஸ்கட் செய்யலாம்.
மருத்துவக் குணங்கள் [தொகு]
- எலும்புகளுக்கு இடையில் இருக்கும் தசைகளை வலிமை பெறச் செய்கிறது.
- இது மலச்சிக்கலைப் போக்க வல்லது.
- இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.
- வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.
- ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது.
- நீரிழிவு நோயாளிகளும் சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.
வேளாண்மை [தொகு]
- ஐந்து கிலோ விதை சாமை கொண்டு பொதுவாக 1 ஏக்கருக்கு விதைக்கலாம்.
- 80-ம் நாளில் கதிர் பிடித்து, 100 முதல் 110 நாட்களில் முற்றி அறுவடைக்குத் தயாராகிவிடும்.
- சாமை விதையின் அளவு மிக சிறியதாக இருப்பதால் அது முளைத்துவர ஐந்து முதல் ஏழு நாட்கள் ஆகும்.
- விதைக்கும் முன்னர் சாமை விதைகளை ஒரு லிட்டர் தண்ணீரில் 100 மில்லி இளநீர் கரைசலில் ஆறு மணி நேரம் ஊற வைத்து பின்னர் விதைப்பு செய்வதால், இளநீரில் உள்ள பொட்டாஷ் சத்தின் கராணமாக வறட்சியை தாங்கி வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கும்.
- சாமைப் பயிரை அதிக பூச்சி நோய்கள் தாக்குவதில்லை.
- மாதம் ஒரு முறை வீதம் இரண்டு முறை மட்டும் ஜீவாமிர்தக் கரைசலை பாசனத் தண்ணீரோடு கலந்து விடலாம்.
- சாமை கதிர்கள் நன்று முற்றி காய்ந்த பின் அறுவடை செய்து, தானியங்களை பிரித்தெடுத்து சுத்தம் செய்து காய வைத்து சேமிக்க வேண்டும்.
- ஒரு ஏக்கருக்கு 600 முதல் 800 கிலோ தானிய விளைச்சல் கிடைக்கும்.