சானா மிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சானா மிர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சானா மிர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்திசம்பர் 28 2005 எ. இலங்கை
கடைசி ஒநாபமே 26 2009 எ. அயர்லாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இ -20
ஆட்டங்கள் 31 9
ஓட்டங்கள் 325 82
மட்டையாட்ட சராசரி 13.54 16.40
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 39 35
வீசிய பந்துகள் 1400 173
வீழ்த்தல்கள் 37 12
பந்துவீச்சு சராசரி 26.48 11.08
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
5 against holand SA 2009;
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 4/10 4/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 2/–
மூலம்: Cricinfo Yahoo Sports Pcboard, ஆகத்து 24 2010

சானா மிர் (Sana Mir, பிறப்பு: சனவரி 5 1986), பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 தொடரின் தலைவர் ஆவார்.[1][2] இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 31 பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 9 பெண்கள் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2005 - 2009/10 பருவ ஆண்டுகளில், பாக்கித்தான் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.அக்டோபர் , 2018 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த பெண்கள் துடுப்பாட்ட பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்தார். 2010 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இவரின் தலைமையிலான அணி தங்கப்பதக்கங்களை வென்றது.[3] 2008 ஆம் ஆண்டில் நடைபெற்ற பெண்கள் உலகக் கிண்னத் துடுப்பாட்டத்திற்கான தகுதிச் சுற்றுப்போட்டித் தொடரில் தொடர் நாயகி விருது பெற்றார். தற்போதைய பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த பெண்கள் வீரர்களுக்கான தரவரிசையில் 8 ஆவது இடம் பிடித்துள்ளார்.கடந்த ஒன்பது ஆண்டுகளாக சிறந்த இருபது வீரர்களுக்கான தரவரிசையில் இடம்பிடித்துள்லார். இவரின் தலைமையிலான அணியில் எட்டு வீரர்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.[4]

பெப்ரவரி, 2017 இல் நடைபெற்ற உலகக்கிண்ணத் துடுப்பாட்ட தகுதிச் சுற்றுப் போட்டியில் 100 இலக்குகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 100 இலக்குகளைக் கைப்பற்றிய முதல் பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார்[5]. செப்டம்பர் , 2017 இல் தலைவர் பொறுப்பினை விலக்கிக் கொன்ட பிறகு பிச்மா மரூஃப் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சானா மிர் சனவரி 5, 1986 இல் சுவாத் கபல் நகரில் காஷ்மீரியக் குடும்பத்தில் பிறந்தார். புள்ளியியல் மற்ரும் பொருளியல் பாடப்பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் பெற்றார். வக்கார் யூனிசு, இம்ரான் கான் மற்றும் ஜாண்டி ரோட்ஸ் ஆகியோர் தனக்குப் பிடித்தமான துடுப்பாட்ட வீரர்கள் எனத் தெரிவித்துள்ளார்.[7]

சர்வதேச போட்ட்டிகள்[தொகு]

தலைவராக[தொகு]

மே 4, 2009 இல் பாக்கித்தான் பெண்கள் துடுப்பாட்ட அணி பன்னாட்டு இருபது20 போட்டிகளுக்கான தலைவர் (துடுப்பாட்டம்) பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.[8] அதர்கு முன்பாக உரோஜ் மும்தாஜ் தலைமையின் கீழ் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். அப்போதும் மும்தாஜ் அணியில் இருந்தார். நயின் அபிதி துணைத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.[9]

2010[தொகு]

2010 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவரின் தலைமையிலான அணி தங்கப் பதக்கத்தை வென்றது.[10]

2011[தொகு]

உள்ளூர்ப் போட்டிகளில் தொடர்ச்சியாக நான்கு முறை கோப்பையினைக் கைப்பற்றியதால் பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் வெற்றிகரமான தலைவராக (உள்ளூர்ப் போட்டிகளில்) கருதப்பட்டார். 2011 ஆம் ஆண்டின் இறுதி வரை இவரின் தலைமையிலான அணி தோல்வி பெறவில்லை. 2011 ஆம் ஆண்டில் இவரின் தலைமையிலான பாக்கித்தான் அணி, இலங்கை பெண்கள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டித் தொடரை வென்றது. நெதர்லாந்து அணிக்கு எதிரான ப இருபது20 இறுதிப் போட்டியில் ஆட்டநாயகி விருது பெற்றார்.

இவரின் தலைமையிலான பாக்கித்தான் அணி 2012 மற்றும் ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணத் துடுப்பாட்ட பயிற்சி ஆட்டத்தில் தகுதி பெற்றது. மேலும் முதன்முறையாக தென்னாப்பிரிக்க அணியினை வீழ்த்தி சாதனை படைத்தது. இதன்மூலம் எட்டாவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியது.

2013[தொகு]

பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியத்தின் சிறந்த பெண் துடுப்பாட்ட வீரருக்கான விருதை 2013 ஆம் ஆண்டில் பெற்றார்.இதன் மூலம் இந்த விருதினைப் பெற்ற முதல் பெண் துடுப்பாட்ட வீரர் எனும் பெருமை பெற்றார்.

2013 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் சுற்ருப்பயணம் செய்து விளையாடிய பாக்கித்தான் பெண்கள் அணி சிறப்பான திறனை வெளிப்படுத்தியது. அந்த அணி முதன்முறையாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி பன்னாட்டு இருபது20 தொடரை சமன் செய்தது. பாக்கித்தான் அணி தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் முடிவில் 6 பாக்கித்தான் அணி வீரர்கள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த இருபது வீரர்களுக்கான தரவரிசையில் இடம் பிடித்தனர்.

சான்றுகள்[தொகு]

  1. "The fast bowler".
  2. "Sana Mir: Pakistan's 'Captain Cool' who leads by example".
  3. Sana retains captaincy, Retrieved 25 August 2010.
  4. Reliance Mobile Rankings: Women's ODI Bowlers, Retrieved 25 August 2010.
  5. "Mir looks at big picture after 1000-100 double". International Cricket Council. 
  6. {{cite web |url=https://www.dawn.com/news/1413453
  7. Yahoo! Cricket: Sana Mir Profile பரணிடப்பட்டது 2011-07-24 at the வந்தவழி இயந்திரம், Retrieved 25 August 2010.
  8. Dawn News: Sana Mir T20 captain, Retrieved 25 August 2010.
  9. Cricinfo: Sana Mir to lead T20 team, Retrieved 25 August 2010.
  10. Final result பரணிடப்பட்டது 2010-11-21 at the வந்தவழி இயந்திரம் Official Asian Games website. Retrieved 19 November 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சானா_மிர்&oldid=3295311" இலிருந்து மீள்விக்கப்பட்டது