சாங்காய் அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாங்காய் அரங்கம்
上海体育场
Shanghai Stadium
இடம் சாங்காய், சீனா
திறவு 1997
உரிமையாளர் சாங்காய் கிழக்காசிய விளையாட்டு மற்றும் கலாசார நிலையம்
தரை புற்கள்
குத்தகை அணி(கள்) சாங்காய் கிழக்காசியா
அமரக்கூடிய பேர் 80,000(உச்சளவு), 65,000(கால்பந்து)

சாங்காய் அரங்கம் (Shanghai Stadium) என்பது சீனாவின் சாங்காய் நகரில் அமையப் பெற்றுள்ள பல்தேவை அரங்கமாகும். தற்போது, இந்த அரங்கம் அதிகளவில் கால்பந்து விளையாட்டு போட்டிகளுக்காகவே உபயோகப்படுத்தப்படுகின்றது.

இவ்வரங்கு, 1997 ஆம் ஆண்டு, நடைபெற்ற சீன மக்கள் குடியரசின் எட்டாவது தேசிய விளையாட்டுப் போட்டியையொட்டி நிர்மாணிக்கப்பட்டது. இது சுமார் 80,000 மக்களை பார்வையாளர்களாக கொள்ளக்கூடிய தகவுகளைக் கொண்டது. இதன் காரணமாக இது 80,000 மக்களின் அரங்கு (八万人体育场) என்றும் அழைக்கப்படுவதுண்டு. உலகிலுள்ள மிகப்பெரிய முப்பது கால்பந்து விளையாட்டரங்குகளில் இதுவும் ஒன்றாகும். அத்தோடு, சீனாவின், குவாங்டொங் ஒலிம்பிக் அரங்கு மற்றும் பீஜிங் தேசிய அரங்கம் ஆகியவற்றிற்கு அடுத்து அளவில் மிகப்பெரிய அரங்கம் இதுவாகும். 2008 ஆம் ஆண்டின் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் போது, கால்பந்து தேர்வாட்டங்களுக்காக இவ்வரங்கம் பயன்படுத்தப்பட்டது. 2007 இல் இடம்பெற்ற விஷேட கோடைகால அனைத்துலக ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின், அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்ற தளமாக இவ்வரங்கு விளங்கியது குறிப்பிடத்தக்கது.

பெயர்[தொகு]

சாங்காய் அரங்கம் என்ற பெயரானது, சாங்காய் உள்ளக அரங்கம் என்ற பெயரோடு மிகவும் நெருக்கமானது. இந்த இரண்டு நிர்மாணங்களின் பெயர்களில் ஒரேயொரு சொல்லே ஆங்கில மொழியிலும் சீன மொழியிலும் வித்தியாசப்படுவதால், பலரும் இவ்விரண்டு நிர்மாணங்களின் பெயர்கள் தொடர்பில் குழம்பியிருக்கின்றனர். சாங்காய் மெட்ரோ லைன் 4 என்ற போக்குவரத்து வசதிகள் உருவாக்கப்பட்டதன் பின்னர், இந்த நிலை இன்னும் மோசமானது. ஏனெனில், இந்த இரண்டு நிர்மாணங்களுக்கான தரிப்பு நிலையங்களும் அடுத்தடுத்து காணப்படுவதாகும்.

தங்குமிட வசதி[தொகு]

இந்த அரங்கத்தினுள்ளேயே, ரீகல் சாங்காய் கிழக்காசியா விடுதி அமையப்பெற்றுள்ளது.

போக்குவரத்து[தொகு]

சாங்காய் அரங்கத்தை அடைந்து கொள்ள, சாங்காய் மெட்ரோ லைன் 4 இல், சாங்காய் அரங்க தரிப்பை நோக்கி பயணிக்க வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாங்காய்_அரங்கம்&oldid=1362111" இலிருந்து மீள்விக்கப்பட்டது