சாகுல் ஹமீது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாகுல் ஹமீது
இயற் பெயர் சாகுல் ஹமிது
தொழில்(கள்) பின்னணிப் பாடகர்
இசைத்துறையில் 1989-1998

சாகுல் ஹமீது (Shahul Hameed, இறப்பு: 1998) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகர். இவரது பாடல்கள் பெரும்பாலும் ஏ. ஆர். ரகுமான் இசைத்த தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளன. 1980களில் சாகுல் ஹமீது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பாடல்களைப் பாடி வந்தார். 30க்கும் மேற்பட்ட பாடல்களை இசைத்தென்றல் மற்றும் சில நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். இவர் 1989ல் ஏ. ஆர். ரகுமானுடன் இணைந்து தீன் இசை மழை என்ற இஸ்லாமிய இசைப் பாடல்களை பாடிப் புகழ் பெற்றார்.


இறப்பு[தொகு]

1998ல் சென்னைக்கு அருகே நடந்த ஒரு வாகன விபத்தில் சாகுல் ஹமீது இயற்கை எய்தினார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சாகுல்_ஹமீது&oldid=1362249" இருந்து மீள்விக்கப்பட்டது