சாகீர் உசைன் (இசைக் கலைஞர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜாகீர் ஹூசைன்

ஜாகீர் ஹூசைன்
பிறப்பு 9 மார்ச் 1951 (1951-03-09) (அகவை 63)
செயல்பட்ட ஆண்டுகள் 1963 முதல் இன்று வரை
வலைத்தளம்
www.zakirhussain.com

ஜாகீர் ஹூசைன் (ஆங்கிலம்: Zakir Hussain இந்தி : ज़ाकिर हुसैन) (9 மார்ச் 1951) இந்தியாவைச் சேர்ந்த தபேலா இசைக் கலைஞர் ஆவார். இவர் தபேலா இசைக் கலைஞர் அல்லா ரக்காவின் மகனாவார்.[1] இவர் இசையமைப்பாளராகவும் மற்றும் நடிகராகவும் அறியப்படுகிறார். இவருக்கு இந்திய அரசு 1988 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கியது. மேலும் 1990 ஆம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி விருது வழங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு, பாரம்பரிய இசை மற்றும் இசையமைப்பாளருக்கு அமெரிக்காவால் வழங்கப்படும் நேஷனல் எண்டோவ்மண்ட் ஃபார் த ஆர்ட்ஸ் நேஷனல் ஹெரிட்டேஷ் பெல்லோஷிப் (National Endowment for the Arts's National Heritage Fellowship) வழங்கப்பட்டது. இவர் மும்பையில் பிறந்தவர் ஆவார். தனது ஏழாவது வயதில் தபேலா வாசிக்கத் தொடங்கினார். 1970 ஆம் ஆண்டு இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக அமெரிக்கா சென்றார். ஆண்டிற்கு 150 இசை நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

.