சாகீன்- II

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாகீன்-2 (Shaheen-2, உருது: '‎شاهين) ஏவுகணை பாகிஸ்தான் நாட்டின் தேசிய அபிவிருத்தி மையம் (National Defence Complex- NDC) தயாரித்த ஏவுகணை ஆகும்.[1][2] இவை அமெரிக்காவின் பெர்ஷிங் ஏவுகணையை ஒத்தவை..[3] சாகீன் என்பது பாகிஸ்தானின் மலைப்பகுதியில் வசிக்கும் ஒருவகை கழுகு (falcon) ஆகும். இந்த ஏவுகணையின் எடை 25,000 கிலோகிராம்கள் ஆகும். இதன் உயரம் 17.5 மீட்டர்கள், விட்டம் 1.4 மீட்டர்கள் ஆகும். இந்த ஏவுகணையை 2,500 கிலோமீட்டர்கள் தொலைவிற்குச் செலுத்தலாம். இது 100 முதல் 300 கிலோமீட்டர்கள் உயரம் வரைச் செல்லும் ஆற்றல் உடையது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ballistic and Cruise Missile Threat - Federation of American Scientists.
  2. Greisler, David (2007). Handbook of technology management in public administration. CRC Press, 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-57444-564-0. https://archive.org/details/handbookoftechno0000unse_h1e1. 
  3. John Pike. "How 'Shaheen' Was Developed". Globalsecurity.org. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகீன்-_II&oldid=3583374" இலிருந்து மீள்விக்கப்பட்டது