சாகீன்-1 (ஏவுகணை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாகீன்-1 (Shaheen-I, உருது: '‎شاهين) ஏவுகணை பாகிஸ்தான் நாட்டின் தேசிய அபிவிருத்தி மையம் (National Defence Complex- NDC) தயாரித்த ஏவுகணை ஆகும். இவை அமெரிக்காவின் பெர்ஷிங் ஏவுகணையை ஒத்தவை.[1] இதில் சாகீன்-1 மற்றும் சாகீன்-1ஏ என இரு வகை உண்டு. 1999 ஆம் ஆண்டு சாகீன்-1 ஏவுகணையும் 2012 ஆம் ஆண்டு சாகீன்-1ஏ ஏவுகணையும் தயாரிக்கப்பட்டது. இவற்றின் உயரம் 12 மீட்டர்கள், விட்டம் ஒரு மீட்டர் ஆகும். சாகீன்-1 750 கிலோமீட்டர்கள் தொலைவிற்கும் சாகீன்-1ஏ 1,500 கிலோமீட்டர்கள் தொலைவிற்கும் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.[2]சாகீன் என்பது பாகிஸ்தானின் மலைப்பகுதியில் வசிக்கும் ஒருவகை கழுகு (falcon) ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. John Pike. "How 'Shaheen' Was Developed". Globalsecurity.org. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
  2. "Exclusive: Pakistani security official discusses the Shaheen-1A test". Terminal X. 2012-04-26. Archived from the original on 2012-12-25. பார்க்கப்பட்ட நாள் 2013-01-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகீன்-1_(ஏவுகணை)&oldid=3553300" இலிருந்து மீள்விக்கப்பட்டது