சவ்வரிசி (மரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சவ்வரிசி மரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சவ்வரிசி (Metroxylon sagu)
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Arecales
குடும்பம்: Arecaceae
பேரினம்: மெட்ரோசைலோன்
இனம்: மெ. சாகு
இருசொற் பெயரீடு
மெட்ரோசைலோன் சாகு
Rottb.

சவ்வரிசி (இலங்கையின் சில பகுதிகளில்: சௌவரிசி) (Metroxylon sagu) பாமே குடும்பத்தைச் சேர்ந்த மெட்ரோசைலோன் பேரினத்தைச் சேர்ந்த தாவரமாகும். இது அயன மண்டலத்துக்குரிய தென்கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, பப்புவா நியூ கினி, மலேசியா ஆகிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.[1]

பயன்பாடும் தயாரிப்பும்[தொகு]

சவ்வரிசித் தாவரத்திலிருந்து பெறப்படும் சோறு (Pith) எனும் நடுப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டு இடித்துத் தூளாக்கப்படுகின்றது. இது மாப்பொருள் மணிகளாக மாற்றப்படும். இவ்வாறு பெறப்படும் சவ்வரிசி மணிகள் சூப் வகைகள், கேக் வகைகள், மாக்கூழ்கள் (puddings) போன்றவை தயாரிப்பதற்கு உபயோகிக்கப்படுகின்றது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவ்வரிசி_(மரம்)&oldid=3356909" இலிருந்து மீள்விக்கப்பட்டது