சவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சவா என்பது மடகாஸ்கரில் அமைந்துள்ள சவா பகுதிகளைக் குறிக்கும். இதனுடைய தலைநகரம் சம்பவா ஆகும். 2009 வரை இந்தப் பகுதி அண்ட்சிரனனா மாகாணத்தின் வசம் இருந்தது. இந்தப் பகுதி தெற்கு மடகாஸ்கரின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக தெற்கில் அனலஞ்சிரொபோ, மேற்கில் சோபியாவும், டயனா வடக்கிலும் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 25,518 கி.மீ ஆகும். 2004 மக்கள்த்தொகைக் கண்கெடுப்பின்படி இங்கு சுமார் 805,300 பேர் வசித்து வருகின்றனர். இந்த மாவட்டம் மொத்தம் 25 தன்னாட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மெரொஜெஜி தேசியப் பூங்கா அமைந்துள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சவா&oldid=1365040" இருந்து மீள்விக்கப்பட்டது