சரபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

|

சிவன் நரசிம்மரை அடக்குகின்ற காட்சி - சிறீலங்காவில் உள்ள முன்னேசுவரம் கோவிலில்உள்ள சிலைவடிவம்

.சரபா ( கன்னடம்: ಶರಭ) இந்துதொன்மவியலில் பகுதி சிங்கமாகவும் பகுதி பயங்கர பறவையாகவும் உள்ள ஓர் விலங்கு. சில சமசுகிருத இலக்கியங்களில் இது எட்டு கால்களை உடைய, சிங்கம் மற்றும் யானையையும் கொல்லக்கூடிய வலுவுள்ள மிருகமாக சித்தரிக்கப்படுகிறது. மேலும் சில இலக்கியங்களில் எட்டு காலுடைய மானாக விவரிக்கப்படுகிறது. [1][2]

சைவ சமயத்தில் சிங்கத் தலையும் மனித உடலும் கொண்ட விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்மரை அவரது பெருங்கோபத்திலிருந்து கட்டுப்படுத்த சிவன் எடுத்த அவதாரம் என்று நம்பப்படுகிறது. அவரது அவதாரம் சரபேசுவரர் அல்லது சரபேசுவரமூர்த்தி என வழிபடப்படுகிறது. [3] வைணவர்கள் திருமாலின் பெயராக நம்புகின்றனர். புத்த மதத்தில் புத்தரின் முன்பிறப்பாக ஜாதகக் கதைகளில் கூறப்படுகிறது.

திருபுவனத்தில் சரபமூர்த்திக்கு (கம்பகரேஸ்வரர்க்கு) ஆலயம் சோழர்களில் கடைசிப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்கன் நிர்மாணித்தான். உலகிலேயே இங்கு தான் சரபமூர்த்திக்கு (கம்பகரேஸ்வரர்க்கு) பிரேத்தியகமான ஆலயம் உள்ளது. சோழர் கால கட்டடகலைக்கு உதாரணமாக இவ்வாலயத்தையும், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள்.

கருநாடக அரசு சின்னம் -இருபுறமும் சிவப்புப்பிடரி கொண்ட மஞ்சள்நிற சிங்க யானை சரபா

சரபா கருநாடக அரசின் சின்னமாகவும் மைசூர் பல்கலைக்கழகம் மற்றும் கருநாடகா அரசு சோப்பு தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றின் சின்னங்களிலும் இடம் பெற்றுள்ளது.

[தொகு] மேற்கோள்கள்

  1. Pattanaik, Devdutt (2006). Shiva to Shankara: decoding the phallic symbol. Indus Source. p. 157. ISBN 8188569046. http://books.google.co.in/books?id=Oka4ekgGDRoC&pg=PT29&dq=Sharabha&ei=3zRFS4m2FIjKlQToibTrDQ&cd=9#v=onepage&q=Sharabha&f=false. 
  2. "शरभ". Monier Williams Sanskrit-English Dictionary. பார்த்த நாள் 18 January 2010.
  3. Waradpande, N. R. (2000). The mythical Aryans and their invasion. Books & Books. pp. 43,46. ISBN 8185016577. http://books.google.co.in/books?id=GR1uAAAAMAAJ&q=Sharabha&dq=Sharabha&ei=3zRFS4m2FIjKlQToibTrDQ&cd=8. Retrieved 2010-01-09. 

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=சரபா&oldid=1086658" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்