சரத் கமல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பதக்க சாதனைகள்
இந்தியாவின் கொடி இந்தியா
ஆண்கள் மேசைப்பந்தாட்டம்
பொதுநலவாயம் விளையாட்டுக்கள்
தங்கம் 2006 மெல்போர்ன் ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (ஒற்றையர்)
தங்கம் 2006 மெல்போர்ன் ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (அணி)
வெண்கலம் 2010 தில்லி ஆண்கள் மேசைப்பந்தாட்டம் (அணி)

அசந்தா சரத் கமல் (பிறப்பு 12 சூலை 1982) இந்தியா, தமிழ்நாடு மாநில தொழில்முறை மேசைப்பந்தாட்ட வீரர். 2004ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த 16வது பொதுநலவாய மேசைப்பந்தாட்டப் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றவர். அதே போட்டியில் இந்தியாவின் ஆண்கள் அணிக்குத் தலைமை தாங்கி ஒன்பது ஆண்டுகள் வெற்றியாளர்களாகத் திகழ்ந்த இங்கிலாந்து அணியை வென்று அணிகளுக்கான விருதினையும் பெற்றுத் தந்தவர். இச்சாதனையைப் பாராட்டி இந்திய அரசு அவருக்கு 2004ஆம் ஆண்டு அருச்சுனா விருது வழங்கியது.[1].

இதனைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டு மெல்போர்ன் நகரில் நடந்த பொதுநலவாயம் விளையாட்டுக்களில் ஆண்கள் ஒற்றையர் மேசைப்பந்தாட்ட இறுதியாட்டத்தில் கூட்டத்தினரின் விருப்பமான ஆத்திரேலியர் வில்லியம் ஹென்செல்லை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். இந்திய அணி சிங்கப்பூர் அணியை வென்று தங்கப்பதக்கம் பெறவும் முதன்மை பங்காற்றினார். அவரது உலக தரவரிசை 63 ஆகும்.

2004ஆம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களிலும் 2006 ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டுக்களிலும் இந்தியாவின் சார்பில் பங்கெடுத்துள்ளார். இந்தியாவின் முதல்நிலையில் நான்கு ஆண்டுகள் இருந்துள்ளார்.

முன்பு சென்னையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.[2] அவ்வப்போது சென்னை வருகிறபோதும் தற்போது இசுப்பானியாவில் உள்ள சான் செபாசுடியன் தி லெ ரேசு (San Sebastian de los Reyes) மன்றத்திற்கு விளையாடுகிறார்.[1] நுங்கம்பாக்கத்திலுள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் பள்ளி[3] மற்றும்இலயோலாக் கல்லூரி, சென்னையின் முன்னாள் மாணவர்[1] சூலை 2009 அன்று இவர் திருமணம் புரிந்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Fresh Faces". India Today. பார்த்த நாள் 2009-08-06.
  2. "Sharath Kamal storms into final". The Hindu. பார்த்த நாள் 2006-03-26.
  3. "PSBB Alumni". PSBB Schools. பார்த்த நாள் 2009-08-28.
"http://ta.wikipedia.org/w/index.php?title=சரத்_கமல்&oldid=1467320" இருந்து மீள்விக்கப்பட்டது