சயி குங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சய் குங் மாவட்டம்
Sai Kung District
வரைப்படத்தில் மாவட்டம்
வரைப்படத்தில் மாவட்டம்
அரசு
 • மாவட்ட பணிப்பாளர்(Mr. NG Sze-fuk, SBS, JP)
பரப்பளவு
 • மொத்தம்136.39 km2 (52.66 sq mi)
 • நிலம்12 km2 (5 sq mi)
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்406,442
நேர வலயம்Hong Kong Time (ஒசநே+8)
இணையதளம்சய் குங் மாவட்டம்

சய் குங் மாவட்டம் (Sai Kung District) என்பது ஹொங்கொங்கின் அரசியல் நிலப்பரப்புக்குள் உள்ள பதினெட்டு (18) மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் ஹொங்கொங்கில் இரண்டாவது பெரிய மாவட்டமாகும். இது சய் குங் தீபகற்பத்தை தெற்காகவும், புதிய கட்டுப்பாட்டகம் பகுதியில் ஒரு பகுதியை உள்ளடக்கியும், கவுலூன் வரை நீண்டும் உள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகப் பகுதி சய் குங் நகரத்தில் உள்ளது. இருப்பினும் மக்கள் தொகை அதிகம் வாழும் பகுதி சுங் வான் ஓ புதிய நகரப் பகுதியாகும். இது புதிதாகக் கட்டப்பட்ட வீட்டுத் தொகுதிகளை அதிகம் கொண்டுள்ள மாவட்டங்களில் ஒன்றாகும்.

சயி குங் மாவட்டத்தின் நிலப்பரப்பளவு 136.39 கிலோ மீட்டர்கள் ஆகும். இதன் மக்கள் தொகை 2006 ஆம் ஆண்டின் கணிப்பின் படி சுங் வான் ஓ பகுதியையும் உள்ளடக்கி 406,442 ஆகும்.

சயி குங் மாவட்டம் மலைத்தொடர்களையும் மலைக்குன்றுகளையும் கொண்ட ஒரு மாவட்டமாகும். சயி குங் மாவட்டத்தில் இருக்கும் தீவுகளும் கடல் நடுவே மலைக்குன்றுகள் போன்றும், மலைத்தொடர்கள் போன்றுமே உள்ளன. பெரும்பகுதியான நிலப்பரப்பு பச்சை பசேலென இயற்கை எழுல் கொஞ்சும் நிலப்பரப்பாகும். மலைக்குன்றுகளும் மலைத்தொடர்களும் கொண்ட சிறு சிறுத் தீவுகள் கடலெங்கும் பரவி காணப்படும் நிலையில், அதன் காட்சிகள் அற்புதமானதாக உள்ளன. இத்தீவுகளில் காணப்படும் சிறிய கிராமங்களும் பார்ப்பதற்கு அழகானவை. அத்துடன் உல்லாசப் பயணிகளை ஈர்க்கும் அழகானதும் தூய்மையானதும் ஆன பல கடற்கரைகளையும் இம்மாவட்டம் கொண்டுள்ளது. சயி குங் தேசிய வனங்களில் உலாவுவதற்காகச் செல்லும் உல்லாசப் பயணிகளும் அதிகம். உயர் தீவு நீர்த்தேக்கம் எனும் பாரிய நீர்த்தேக்கம் ஒன்றும் இம்மாவட்டத்தில் உள்ளது.

சயி குங் நகரம்[தொகு]

சயி குங் மீனவச் சந்தை

தற்போது சயி குங் நகரம் ஆக உருவாக்கப்பட்டுள்ள, முன்னாள் சயி குங் கிராமம் கடலுணவுப் பிரியர்களின் சுவர்க்கமாகும். இந்த கடலுணவு வகைகளுக்கான மீன் மற்றும் கடல் உயிரினங்கள் உயிருடனேயே கொண்டு வரப்பட்டு தொட்டிகளில் வைக்கப்படும். உணவுப் பிரியர்கள் தாம் விரும்பும் மீனைக் காட்டியுடனேயே அவைகள் உணவுக்காக கொல்லப்படும். உள்ளூர் உல்லாசப் பயணிகள் முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரை அனைவரையும் இந்த கடலுணவு உணவகங்கள் கவர்ந்தவை. சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் மக்கள் நிரம்பிக் காணப்படும். சய் குங் நகரம் செல்லும் பாதையும் வாகன நெரிசல்களை ஏற்படுத்தும்.

அத்துடன் கடலில் படகுகளின் உள்ளேயே வைத்து விற்பனை செய்யும் மீனவர்களும் கடலின் திடலில் இருப்பார்கள். அவர்கள் குவியல் குவியலாக விற்பார்கள். வேண்டுவோர் எந்த குவியல் வேண்டும் என்று மேலிருந்து காட்டினால் அவற்றை அப்படியே உயிருடன் ஒரு உறையில் போட்டு தருவார்கள். இந்த மீன் வணிகப் படகுகள் மேல்தளத்தில் இருந்து பல அடிகளின் கீழே கடலில் இருக்கும். வாங்குவோர் பணம் கொடுப்பதற்கும், பணத்தை வாங்கிக்கொண்டு மீனைக் கொடுப்பதற்கும் ஒரு நீண்டத் தடியில் ஒரு வலை வைத்திருப்பார்கள்.

சுங் வான் ஓ புதிய நகரம்[தொகு]

சுங் வான் ஓ புதிய நகரம்

அத்துடன் சுங் வான் ஓ புதிய நகரம் எனும் புதிதாக உருவாக்கப்பட்ட வீட்டுத்தொகுதிகளும் அழகிய பூங்காக்களும் கூட இந்த மாவட்டத்தில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. "சுங் வான் ஓ" ஒரு இயற்கை எழில் நிறைந்த ஒரு குடாவாகும் சயி குங் மாவட்டத்தில். லெய் யூ மூன் எனும் ஒரு மீனவக் கிராமமும் இம்மாவட்டத்தில் கடலுணவுப் பிரியர்கள் மத்தியில் பிரசித்திப்பெற்ற இடமாகும்.

இரும்பு மற்றும் உருக்கு தொழிற்சாலைகளும் இம்மாவட்டத்தில் உள்ளன. ஹங் ஹாவு கிராமம் கப்பல் கட்டுமாணப் பணிகளுக்கு பெயர் பெற்ற இடமாகும். 1997 ஆம் ஆண்டு ஹொங்கொங் அரசாங்கம் பாரிய புணரமைப்பு திட்டங்களை இப்பகுதியில் மேற்கொண்டது. இத்திட்டமானது இப்பகுதிகளின் பூர்வக்குடிகள் 95% வீதமானோருக்கு வசிப்பிட மற்றும் வாழ்வாதரங்களை மேம்படுத்தியது. தற்போது கிட்டத்தட்ட 380,000 பூர்வக்குடி மக்கள் இங்கு வாழ்கின்றனர்.

இந்த புதிய நகரமயமாக்கள் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சுங் வான் ஓ புதிய நகரம் மக்கள் வசிப்பிடத் தொகுதிகள் பல வானளாவிகளைக் கொண்டுள்ளன.

பிரசித்திப்பெற்ற கடற்கரைகள்[தொகு]

சயி குங் மாவட்டத்தில் உள்ள ஒரு கடற்கரை

சயி குங் மாவட்டம் அழகிய மற்றும் தூய்மையான பல கடற்கரைகளை கொண்டுள்ளது. அவைகளாவன:

சயி குங் மாவட்டத் தீவுகள்[தொகு]

சயி குங் நகரத்தில் இருந்து தீவு ஒன்றுக்கு செல்லும் படகு

இந்த சயி குங் மாவட்டத்தில் உள்ள தீவுகளுக்கு மக்கள் பொழுது போக்காக ஒவ்வொரு நாளும் செல்வது ஒரு விருப்பு நிகழ்வாகும். அதற்கான படகுகள் ஆயிரக்கணக்கில் தயார் நிலையில் உள்ளன. ஹொங்கொங் வாழ் மக்களின் விருப்பு நிகழ்வுகளில் அல்லது பொழுது போக்கு நிகழ்வுகளில் ஒன்று, கோடைக்காலங்களில் சயி குங் சென்று சிறிய படகுகளை வாடகைக்கு பெற்று மீன் பிடித்தலாகும்.

இத்தீவுகளில் அதிகமானவற்றில் மக்கள் வசிப்பதில்லை. இருப்பினும் உல்லாசப் பயணிகள் விரும்பி செல்லும் தீவுகளாவன:

கவ் சாய் சாவ் எனும் பெரியத் தீவு பொது மக்களுக்கான குழிப்பந்தாட்டம் விளையாட்டு மைதானத்தைக் கொண்டுள்ளது. இதற்கு செல்வோருக்கான சிறப்பு சொகுசு படகு சேவை உள்ளது.

பல்கலைக்கழகம்[தொகு]

ஒங்கொங்:விக்கிவாசல்

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த மாவட்டத்தில் தூய நீர் குடா பகுதியில் உள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சயி_குங்_மாவட்டம்&oldid=3620106" இலிருந்து மீள்விக்கப்பட்டது