சமையல் அடுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சமையல் அடுப்புகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சமையல் அடுப்பு (Kitchen stove) என்பது சமையலறையில் உணவு பொருள் சமையல் செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் அடுப்புகள் ஆகும். இந்த அடுப்புகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான எரிபொருள்களுக்கேற்ப அடுப்புகளும் மாறுபடுகின்றன.

திட எரிபொருள் அடுப்புகள்[தொகு]

மரக்குச்சிகள் (விறகு), மரத்தூள், தேங்காய் மட்டை, கடலைப்பருப்பு மற்றும் முந்திரிப்பருப்பு ஓடுகள், நிலக்கரி போன்ற திடப்பொருள்களை மூல எரிபொருள்களாகக் கொண்டு அமைக்கப்படும் அடுப்புகள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.

திரவ எரிபொருள் அடுப்புகள்[தொகு]

மண்ணெண்ணெய், பெட்ரோல், டீசல் போன்ற திரவப் பொருள்களை மூல எரிபொருள்களாகக் கொண்டு அமைக்கப்படும் அடுப்புகள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.

எரி வாயு அடுப்புகள்[தொகு]

திரவநிலை பெட்ரோலிய எரிவாயு (LPG), சாண எரிவாயு போன்றவைகளை மூல எரிபொருள்களாகக் கொண்டு அமைக்கப்படும் அடுப்புகள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.

மின்சார அடுப்புகள்[தொகு]

மின்சாரத்தைப் பயன்பாட்டுப் பொருளாகக் கொண்டு அமைக்கப்படும் அடுப்புகள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.

சூரிய ஒளி அடுப்புகள்[தொகு]

சூரிய ஒளியைச் சேமித்து வைத்துக் கொண்டு அதன் மூலம் எரிசக்தியைப் பெறக்கூடிய அடுப்புகள் இவ்வகையைச் சேர்ந்தவையாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சமையல்_அடுப்பு&oldid=1678631" இருந்து மீள்விக்கப்பட்டது