சண்டாக்கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சன்டக்கான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சண்டாக்கான்
山打根
Elopura
Skyline of சண்டாக்கான்
Official seal of சண்டாக்கான்
முத்திரை
சிறப்புப்பெயர்: இயற்கை நகரம், சின்ன ஆங்காங்
Location in Sabah and Malaysia
Location in Sabah and Malaysia
Country மலேசியா
மாநிலம் சபா
நிறுவப்பட்டது 1879
அரசு
 - கவுன்சில் தலைவர் Ir. ஜேம்சு வாங்
பரப்பளவு
 - நகரம் 2 கிமீ²  (875 ச. மைல்)
மக்கள் தொகை (2009)
 - நகரம் 479
 - அடர்த்தி /கிமீ² (/சதுர மைல்)
நேர வலயம் MST (ஒ.ச.நே.+8)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
Not observed (ஒ.ச.நே.)
அஞ்சல் எண் 90000 to 90999
தொலைபேசி குறியீடு(கள்) 089
இணையத்தளம்: http://www.mps.sabah.gov.my/

சண்டாக்கான் என்பது கிழக்கு மலேசியாவில் சபா மாநிலத்தில் உள்ள இரண்டாவது மிகப்பெரிய நகராகும். இது வடகிழக்கு போர்னியோ கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இந்நகரம் தீவின் கிழக்கு கடற்கரையுடன் அமைந்துள்ளதுடன் சண்டாக்கான் பிரிவின் நிர்வாக மையமாகவும் உள்ளது. இந்நகரம் முன்பு பிரித்தானிய வடக்கு போர்னியோவின் முந்தைய தலைநகராக இருந்தது. சன்டக்கான் சபாவின் சூழலியல் சுற்றுலாவின் முக்கிய நுழைவாயிலாக உள்ளது. இங்குள்ள ஒரங்குட்டான் மறுவாழ்வு மையம், மழைக்காடு டிஸ்கவரி மையம், ஆமை தீவுப் பூங்கா, கினாபதகான் ஆறு மற்றும் கோமன்தாங் குகைகள் குறிப்பிடத்தக்கவை.

அதுமட்டுமில்லாமல், இரண்டாம் உலகப்போரின் போது யப்பானாற் பயன்படுத்தப்பட்ட விமானத்தளம் தற்போது சண்டாக்கான் விமான நிலையமாக பயன்படுத்தப்படுகிறது. இது கட்டாய தொழிலாளர்கள் 6000 பேரைக் - சாவகக் குடியானவர்கள் மற்றும் கூட்டணி நாடுகளின் போர்க்கைதிகள் என்போரைக் - கொண்டு கட்டப்பட்டது. அதில் 1945ல், மிஞ்சிய ஆத்திரேலிய கைதிகள் சன்டக்கான் மரண அணிவகுப்புக்கு அனுப்பப்பட்டனர் அதில் 6 பேர் மட்டுமே தப்பிப்பிழைத்தனர்.

பொருளடக்கம்

[தொகு] காலநிலை

சண்டாக்கான் வெப்பமண்டல மழைக்காடு தட்ப வெப்பத்தை கொண்டுள்ளதாக கோப்பன் காலநிலை வகைப்பாடு தெரிவிக்கிறது. இந்நகரம் ஆண்டு முழுவதும் மழை பொழியும் இடமாக உள்ளது. அதிகபட்ச மழைப்பொழிவு நவம்பரிலிருந்து சனவரி வரை. அதிகபட்ச வெயில் 31 பாகை செல்சியசாகவும் குறைந்தபட்ச அளவு 24 பாகையாகவும் உள்ளது. சண்டாக்கானில் வருடத்திற்கு சராசரியாக 3100மிமீ அளவு மழைபொழிகிறது.

தட்பவெப்ப நிலை தகவல், சண்டாக்கான்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச Year
உயர் சராசரி °C (°F) 28.9
(84)
28.9
(84)
30
(86)
31.1
(88)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
31.7
(89)
31.1
(88)
31.1
(88)
30
(86)
29.4
(85)
30.6
(87)
தாழ் சராசரி °C (°F) 24.4
(76)
24.4
(76)
24.4
(76)
24.4
(76)
24.4
(76)
24.4
(76)
23.9
(75)
23.9
(75)
23.9
(75)
23.9
(75)
24.4
(76)
24.4
(76)
24.4
(76)
பொழிவு mm (inches) 410
(16.14)
250
(9.84)
200
(7.87)
110
(4.33)
150
(5.91)
190
(7.48)
180
(7.09)
200
(7.87)
240
(9.45)
260
(10.24)
350
(13.78)
450
(17.72)
3,060
(120.47)
Source: http://www.weatherbase.com/weather/weather.php3?s=19469&refer=&units=metric


[தொகு] ஒளிப்பட வரிசை

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளியிணைப்புகள்


அமைவிடம்: 5°50′N 118°07′E / 5.833, 118.117

"http://ta.wikipedia.org/w/index.php?title=சண்டாக்கான்&oldid=1061416" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்