ஜேம்ஸ் ராம்ஸ்போதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சந்த சுவாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| சந்த சுவாமி | |
|---|---|
| பிறப்பு | 21-03-1915 இங்கிலாந்து |
| இறப்பு | 12-12-2004 இங்கிலாந்து |
சந்தசுவாமி என்ற தீட்சைப் பெயர் கொண்ட ஜேம்ஸ் ராம்ஸ்போதம், இரண்டாம் சோல்பரிப் பிரபு (James Ramsbotham, 2nd Viscount Soulbury, மார்ச் 21, 1915 - திசம்பர் 12, 2004) என்பவர் யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் துறவுச் சீடர்களில் ஒருவராவார். தன்னை அறியும் ஆர்வத்தாலே (Urge for Self-Realization) யோகசுவாமிகளை அண்டி வந்து உயர் ஞான சாதனை பயின்று உயர்நிலை அடைந்த ஞானி.
பொருளடக்கம் |
வாழ்க்கைக் குறிப்பு [தொகு]
சந்தசுவாமிகளின் தந்தையார் இலங்கையில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் இறுதி ஆளுனராக இருந்த சோல்பரிப் பிரவு ஹேவால்ட் ராம்ஸ்போதம் ஆவார். இவரது தாயார் பெயர் டோறிஸ் டி ஸ்ரெயின் ராம்ஸ்போதம். இவர் 1915 ஆண்டு மார்சு 21 ஆம் நாள் இங்கிலாந்தில் பிறந்தார்.