சந்திர குலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சந்திர குலம் அல்லது சந்திர வம்சம்என்பது கலியுக அரசப் பரம்பரையில் ஒன்றாகும். வைணவர்களின் கடவுளான திருமால் சந்திர குலமான யது குலத்தில் கிருஷ்ணராக அவதாரம் எடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. [1]. யாதவர்கள் மாயோன் குலம்(சந்திர குலம்) அல்லது சந்திர குலத்தை சேர்ந்த யது வம்சத்தவர்கள்.இவர்கள் வேளிர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.கடையேழு வள்ளல்கள் யது குலத்தின் வழி வந்த மன்னர்கள் ஆவார்கள். [2]

சந்திர குலத் தோற்றம்[தொகு]

சந்திர குலம் தோன்றியதாக ஒரு கதை சொல்லப்படுகிறது. அது புரூரவ சரிதை என்னும் நூலில் உள்ளது. பிரகஸ்பதியின் மனைவி தாரை. இவள் சந்திரனைக் கூடினாள். புதன் என்னும் மகனைப் பெற்றாள். வைவச்சுத மனு என்பவனின் மகன் இளன். இளன் வேட்டையாடிக்கொண்டு சென்றபோது ஒரு காட்டை அடைந்தான். அந்தக் காட்டுக்கு யார் வந்தாலும் பெண்ணாக மாறும்படி ஒரு சாபம் இருந்தது. அதன்படி இளன் ‘இளை’ ஆனான். புதன் இளையை மணந்தான். இவர்களுக்குப் பிறந்த குழந்தை புரூரவன்.

தேவ மகளிர் நீராடினர். அவர்களில் அழகில் சிறந்த ஊர்வசியைக் ‘கேசி’ என்பவன் கவர்ந்துசென்றான். மகளிர் அலறினர். புரூரவன் ஊர்வசியை மீட்டுத் தேவேந்திரனிடம் ஒப்படைத்தான். தேவேந்திரன் மகிழ்ந்து ஊர்வசியைப் புரூரவனுக்கே தந்துவிட்டான்.

ஊர்வசி தேவலோகம் மீள வழி கேட்டாள். ஆடை இல்லாத நிலையில் புரூரவனைப் பார்க்க நேர்ந்தால் திரும்பலாம் என இந்திரன் வரமளித்தான். ஒருநாள் புரூரவன் ஊர்வசியோடு உறவு கொண்டிருக்கும் வேளையில் புரூரவனின் ஆடையைக் கவர்ந்துவருமாறு இந்திரன் கந்தர்வர்களை அனுப்பினான். அவர்களும் அதனைச் செய்தனர். பரூரவன் தன் ஆடையை மீட்டுவரப் புறப்பட்டான். அப்போது ஒரு மின்னல். ஊர்வசி புரூரவனை அம்மணத்தில் பார்த்துவிட்டாள். உடனே தேவலோகம் சென்றுவிட்டாள்.

தேவலோகத்தில் ஊர்வசி நடனமாடிக்கொண்டிருந்தாள். அவள் மனம் புரூரவனை நாடியது. இதனை உணர்ந்த பரதாச்சாரியன் ஊர்வசியைப் பூங்கொடி ஆகுமாறு சபித்தான். அவள் பூங்கொடி ஆனாள். பரூரவன் ஊர்வசி நினைவில் பூங்கொடிகளை-யெல்லாம் தழுவினான். பூங்கொடியாக இருந்த ஊர்வசி தன் உருவம் பெற்றாள். இவர்களுக்குப் பிறந்த மகன் ‘ஆயு’. இவன் வழியில்தான் சந்திரகுலம் தோன்றிற்று.

சந்திர குல அரசர்கள்[தொகு]

தமிழகத்தில் வரலாற்று கால மெய்கீர்த்திகள் சோழரை சூர்ய வம்சம் என்றாலும் இந்து மத புராணங்களோ சேரர், சோழர், பாண்டியர் போன்ற மூவேந்தர்களையும் சந்திர வம்சம் என்றே கூருகின்றன.[3] தமிழக மூவேந்தர்கள் பின்வருமாறு அட்டவணைப் படுத்தப் பட்டுள்ளனர்.

 • சந்திர வம்சம்
 1. சந்திரன்
 2. புரூரவன்
 3. ஆயு, தீமந்தன், அமவசு, சிராயு (தசதாயு),சுருதாயு (வசுமந்தன்)
 4. இவர்களுள் ஆயுவின் மக்கள் ரஜி, அரம்பன், நகுஷன், க்ஷத்ர விருதன்,அநேநஸ்
 5. இவர்களுள் நகுஷனுடைய மக்கள் உத்தபன், ஆயதி, யயாதி, யதி, சம்யாதி
 6. துரஸ்வன்
 7. வக்ரி
 8. கோபானன்
 9. காந்தன்
 10. துர்யசித்தன்
 11. குரு
 12. துஷ்யந்தன்
 13. பரதன்
 14. பிரதிபன்
 15. சாந்தனு
 16. பீஷ்மர்
 17. சித்திராங்கதன்
 18. விசித்திரவீரியன்
 19. விதுரன்
 20. திருதராட்டிரன்
 21. பாண்டு
 22. விதுரன்
 23. பாண்டவர்
 24. கௌரவர்
 25. அபிமன்யு
 26. பரீட்சித்து
 27. ஜனமேஜயன்
 28. மூவேந்தர் சோழனைச் சூரிய குலம் என்றும், பாண்டியனைச் சந்திர குலம் என்றும், சேரனை அக்கினிக் குலம் என்றும் கொள்கின்றனர். [4]

காண்க[தொகு]

சூரிய குலம்

அடிக்குறிப்பு[தொகு]

 1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1975, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. 
 2. http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0413.html author=ராகவ ஐய்யங்கார் pages=. 
 3. பதினெண் புராணங்கள், கிருஷ்ணமாச்சாரியார், நர்மதா பதிப்பகம், சென்னை - 17.
 4. ஒட்டக்கூத்தர் சோழனைப் புகழ்வதாகவும், புகழேந்திப் புலவர் பாண்டியனைப் புகழ்வதாகவும் உள்ள பாடல்களில் ஒட்டக்கூத்தர் பாடல்
  கோரத்துக்கு ஒப்போ கனவட்டம் அம்மானை, கூறுவதும் காவிரிக்கு வையையோ அம்மானை
  ஆருக்கு வேம்பு நிகர் ஆகுமோ அம்மானை, ஆதித்தனுக்கு நிகர் அம்புலியோ அம்மானை - நூல் தனிப்பாடல் திரட்டு பக்கம் 56

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சந்திர_குலம்&oldid=1743274" இருந்து மீள்விக்கப்பட்டது