சந்திரிகா விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள், 1994 - 1995

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சந்திரிகா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள், 1994 - 1995 சமாதானத்தை முன்வைத்து 1994 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையான பேச்சுவார்தைகளை குறிக்கின்றது. இப்பேச்சுவார்த்தைகள் பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களுடன் 1995 ஜனவரி 3இல் இருதரப்பாலும் ஆரம்பிக்கப்பட்டாலும் குறுகிய காலப்பகுதியில் இறுக்க நிலையை அடைந்தது. தமிழ் மக்களின் உடனடி அடிப்படைப்பிரச்சினைகளை அரசாங்கம் கவனிக்க மறுக்கின்றது எனக் காரணம் காட்டி விடுதலைப் புலிகள் ஏப்ரல் 19, 1995ம் ஆண்டு முன்னறிவித்தலுடன் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக்கொண்டனர்.

வெளி இணைப்புகள்[தொகு]