சத்யா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சத்யா
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா
நடிப்பு கமல்ஹாசன்
அமலா
ஆர்.எஸ். சிவாஜி
ஜனகராஜ்
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு 1988
மொழி தமிழ்

சத்யா திரைப்படம் 1988 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும்.இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,அமலா போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வகை[தொகு]

நாடகப்படம்

நடிகர்கள்[தொகு]


கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சத்யா (கமல்ஹாசன்) வேலை தேடிக்கொண்டிருக்கும் ஒரு பட்டதாரி இளைஞனாவான்.வீட்டில் தனது தந்தையின் புதிய மனைவியான அவன் சித்தியினால் பலமுறை பேச்சுக்களுக்கும் இன்சொற்களுக்கும் ஆளாகின்றான் சத்யா.இதனால் வீட்டில் அதிக அளவில் தங்கி இருப்பதனையும் விரும்புவதில்லை.நண்பர்களுடன் வெளியில் சுற்றித் திரியும் சத்யா சமுதாயத்தில் நடக்கும் பல அட்டூழியங்களைக் கண் கொடுத்துப் பார்த்து கோபம் கொள்கின்றான்.காடையர்களால் தாக்கப்படும் ஒருவனைக் காப்பாற்றவும் செய்கின்றான்.இதற்கிடையில் திருடனிடம் நகையினைப் பறி கொடுத்த பெண்ணை (அமலா) அத்திருடனிடமிருந்து காப்பாற்றி அவள் வீடு வரை வழியனுப்புகின்றான் சத்யா.பின்னர் இருவரிடையே காதல் மலர்கின்றது.பல நாட்கள் கழித்து தமது குழுவினர்கள் தாக்கப்பட்டதையறிந்த காடையர் கூட்டம் சத்யாவின் தங்கையினை நடுத் தெருவில் மக்கள் முன்னிலையில் வைத்து அவளாது ஆடையயினை உருவினர்.இதனை அறிந்து கொள்ளும் சத்யா அக்காடையர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களைத் தாக்கினான்.இதனையறிந்த காடையர்களின் தலைவனாக விளங்குபவனால் சத்யாவின் நண்பர்களில் சிலரைக் வெட்டிக் கொலை செய்தான் அவனுடைய காடையர் பட்டாளத்துடன்.இதற்கிடையில் நல்லவனாக சத்யாவைத் தனது பக்கம் இருக்குமாறு கூறிக்கொள்ளும் ஒரு தீயவனால் சத்யா கைக்கூலியாக்கப்படுகின்றான்.பின்னர் அவனின் தீய மனதை அறிந்து கொள்ளும் சத்யா அவனை எதிர்க்கவே சத்யாவைக் கொலை செய்வதற்காக காடையர்களை அனுப்புகின்றான் அவ்வரசியல்வாதியும்.காடையர்களினால் தாக்கப்பட்டு பின்னர் சுட்டுக்காயப்படுத்தப்படுகின்ற சத்யமூர்த்தி நினைவு வந்தவுடனேயே தனக்கு இந்நிலமையினை ஏற்படுத்தியவர்களைப் பழி வாங்குகின்றான்.

பாடல்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=சத்யா_(திரைப்படம்)&oldid=1621512" இருந்து மீள்விக்கப்பட்டது