சடகோபன் ரமேஷ்
| சடகோபன் ரமேஷ் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 19 | 24 | ||
| ஓட்டங்கள் | 1367 | 646 | ||
| ஓட்ட சராசரி | 37.97 | 28.08 | ||
| 100கள்/50கள் | 2/8 | -/6 | ||
| அதியுயர் புள்ளி | 143 | 82 | ||
| பந்துவீச்சுகள் | 54 | 36 | ||
| விக்கெட்டுகள் | - | 1 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 38.00 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 1/23 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 18/- | 3/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
சடகோபன் ரமேஷ் (Sadagoppan Ramesh), பிறப்பு: அக்டோபர் 16 1975), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் 19 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 24 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 2001 – 2007 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
2005-2007 காலப்பகுதியில் கேரளா துடுப்பாட்ட அணியிலும், 2007-2008 காலப்பகுதியில் அசாம் துடுப்பாட்ட அணியிலும் இணைந்து விளையாடினார். தனது முதலாவது ஒருநாள் போட்டியில் முதலாவது பந்து வீச்சில் ஒரு இலக்கைக் கைப்பற்றிய ஒரே ஒரு இந்தியப் பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் இவர் கொண்டுள்ளார். இவர் கைப்பற்றியது மேற்கிந்தியத்தீவுகள் அணியைச் சேர்ந்த நிக்சன் மெக்லீன் இனுடையது.
சடகோபன் ரமேஷ் 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் மூத்த சகோதரனாக சஞ்சய் என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார்.