சங்க இலக்கியத்தில் பூக்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்க இலக்கியத்தில் கூறப்படும் பூக்கள்:
சங்க காலத்துத் தமிழ் நூல்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் கூடி விளையாடும் சிறுமியர் குவித்து விளையாடிய மலர்களாகக் கூறப்படுபவை இவை:
- காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி \5\
- வெட்சி, வேரி, தேமா, மணிச்சிகை, உரிதுநாறு, \10\
- அவிழ்தொத்து, உந்தூழ், கூவிளம், எரிபுரை, எறுழம், \15\
- சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, குடசம், \20\
- எருவை, செருவிளை, கருவிளை, பயினி, வானி, \25\
- குரவம், பசும்பிடி, வகுளம், காயா, ஆவிரை, \30\
- வேரல், சூரல், பூளை, குறுநறுங் கண்ணி, குலுகிலை, \35\
- மருதம், கோங்கம், போங்கம், திலகம், பாதிரி, \40\
- செருந்தி, அதிரல், சணுபகம், கரந்தை,குளவி, \45\
- தில்லை, பாலை, கல் இவர் முல்லை, குல்லை, பிடவம் \50\
- சிறு மாரோடம், வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல், தாழை, \55\
- தளவம், முள்தாள் தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, \60\
- சேடல், செம்மல், செங்குரலி, கோடல், கைதை, \65\
- வழை, காஞ்சி, மணி நெய்தல், பாங்கர், மராஅம், \70\
- தணக்கம், ஈங்கை, இலவம், கொன்றை, அடும்பு,\75\
- ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம்,பிண்டி, \80\
- வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாய், \85\
- தோன்றி, நந்தி, நறவம், புன்னாகம், பாரம், \ 90\
- பீரம், குருக்கத்தி, ஆரம், காழ்வை, புன்னை,\95\
- நரந்தம், நாகம், இருள்நாறி, குருந்தம், வேங்கை, 100\
- புழகு, \101\ (பிறவும்)