சங்குப்பூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபேபேசியே(Fabeceae)
சங்குப்பூ
சங்குப்பூ
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) Eudicots
(தரப்படுத்தப்படாத) Rosids
வரிசை: Fabales
குடும்பம்: ஃபேபேசியே
பேரினம்: Clitoria
இனம்: 'C. ternatea
இருசொற்பெயர்
Clitoria ternatea
லின்னேயஸ்

சங்குப்பூ வெள்ளை, கருநீலம், ஊதா, வெண்மை கலந்த கருநீலம், ஊதா கலந்த கருநீலம் என பல நிறங்களில் காணப்படுகிறது. தோற்றத்தில் சங்கின் விரிவாய் போலத் தோற்றம் தருவதால் இதனை இவ்வாறு கூறுகின்றனர். நீல நிறப்பூவை கருவிளை என குறிப்பிடுகின்றனர். ஏழு வண்ணங்களில் ஒன்றான நீலநிறத்தைப் பஞ்சவண்ணங்களில் ஒன்றாகக் காணும்போது கருமை எனக் கொள்வர். இந்த வகையில் இது கரிய விளைப்பூ. குன்றத்து மகளிர் குவித்து விளையாடிய பூக்களில் இதுவும் ஒன்று.[1] வெள்ளை நிற சங்குப் பூவை செருவிளை என குறிப்பிடுவர்.

வேறு பெயர்கள்[தொகு]

காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் எனவும் அழைக்கப்படுகின்றது.

பரவல்[தொகு]

இந்த செடி ஆசியாவில் தோன்றியது. தற்பொழுது ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய கண்டங்களிலும் காணப்படுகிறது.

விவரிப்பு[தொகு]

பல கால நிலைகளில் பூ மற்றும் நெற்று

இது கொடி போல் வளர்பவை. ஈரப்பதம் அதிகம் உள்ள மண்ணில் வளர்பவை. இதன் பூவில் இருந்து நெற்று தோன்றும். ஒவ்வொரு நெற்றிலும் 6 முதல் 10 விதைகள் இருக்கும். இதன் நெற்று இளசாக இருக்கும் பொழுது சாப்பிடப்படுகிறது. இதன் வேர்கள் உப்பிறப்பு வளியை மண்ணில் நிறுத்துவதால் இது மண்ணின் தன்மையை வளப்படுத்த வளர்க்கப்படுகிறது.

பயன்பாடு[தொகு]

தென்கிழக்கு ஆசியாவில் உணவில் நிறத்தை சேர்ப்பதற்காக இப்பூ பயன்படுத்தப்படுகிறது. பர்மாவில் இப்பூவை தோசை மாவில் கலந்து தோசை செய்யப்படுகிறது. இப்பூ மாலையாக கட்டப்பட்டு கோவில்களில் பயன்படுத்தப்படுகிறது. இப்பூவை எலுமிச்சை சாறுடன் சேர்த்து குடிக்கின்றனர்.

மருத்துவ குணங்கள்[தொகு]

இந்த பூவிற்கு பல மருத்துவ குணங்கள் உள்ளதால் ஆயுர்வேத்தில் பல நூற்றாண்டுகளாக மனதைச் சாந்தப்படுத்துவதற்காக இது பயன்படுத்தபடுகிறது.[2] பண்டைய காலத்தில் கானாரியா மற்றும் மலட்டுதன்மைக்கு மருந்தாகப் பயன்படுத்தபட்டுள்ளது.[3] அண்மைக் காலத்தில் இதன் சாற்றில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட க்லைடோடைடு புரதக்கூறுகள் நுண்ணுயிர் கொல்லித்திறன் கொண்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[4] இதன் சாற்றில் இருந்து நுண்ணுயிர் கொல்லி மற்றும் புற்றுநோய்க்கான மருந்தை தயாரிக்க வாய்ப்புள்ளது.[5]

காட்சியகம்[தொகு]

முன் மற்றும் பின்பக்கம்
சங்குப்பூவின் புறத்தோற்றம்
தாய்லாந்தில் கோவா டோம் எனப்படும் நீல நிற இனிப்பு சங்குப்பூவால் சேர்த்து செய்யப்படுகிறது.

மேலும் பார்க்க[தொகு]

அடிக்குறிப்பு[தொகு]

  1. மணிப்பூங் கருவிளை - குறிஞ்சிப்பாட்டு (அடி 68)
  2. Mukherjee PK, Kumar V, Kumar NS, Heinrich M"The Ayurvedic medicine Clitoria ternatea-From traditional use to scientific assessment." J Ethnopharmacol. 2008 Sep 20;
  3. Fantz, Paul R. (1991). "Ethnobotany of Clitoria (Leguminosae)". Economic Botany (New York Botanical Garden Press) 45 (4): 511–20. doi:10.1007/BF02930715. 
  4. Nguyen, GK; Zhang, S; Nguyen, NT; Nguyen, PQ; Chiu, MS; Hardjojo, A; Tam, JP. (Jul 2011). "Discovery and characterization of novel cyclotides originated from chimeric precursors consisting of albumin-1 chain a and cyclotide domains in the Fabaceae family". J Biol Chem. 286 (27): 24275–87. 
  5. Nguyen, Kien Truc Giang; Zhang, S; Nguyen, N. T.; Nguyen, P. Q.; Chiu, M. S.; Hardjojo, A.; Tam, J. P. (8). "Discovery and Characterization of Novel Cyclotides Originated from Chimeric Precursors Consisting of Albumin-1 Chain a and Cyclotide Domains in the Fabaceae Family". Journal of Biological Chemistry 286 (27): 24275–24287. doi:10.1074/jbc.M111.229922. பப்மெட் 21596752. PMC 3129208. http://www.jbc.org/content/286/27/24275.abstract. பார்த்த நாள்: July 8, 2011. 
"http://ta.wikipedia.org/w/index.php?title=சங்குப்பூ&oldid=1460494" இருந்து மீள்விக்கப்பட்டது