சங்கீதா (நடிகை)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதே தலைப்பிலமைந்த மற்றொரு கட்டுரைக்கு, பார்க்க சங்கீதா கிரிஷ் (நடிகை)
சங்கீதா (English:sangita) ஒரு இந்திய நடிகை. இவர் தமிழிலும் மலையாளத்திலும் நடித்துள்ளார். சங்கீதா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகி வரை 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மகாநதி (திரைப்படம்) படத்தில் பெரிய காவேரியாக நடித்துள்ளார். இவர் பூவே உனக்காக படத்தின் மூலமும் எல்லாமே என் ராசாதான் படத்தின் மூலமும் பிரபலமானவர்
தனிப்பட்ட வாழ்க்கை [தொகு]
இவர் படத்தொகுப்பாளர் சரவணனனை திருமணம் செய்துகொண்டவர். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இவருக்கு சாய் தேஜாஸ்வினி என்ற மகள் உள்ளார். இவரது கணவர் இயக்கிய சிலம்பாட்டம் படத்தில் உதவியாக இருந்துள்ளார்.
நடித்துள்ள படங்கள் [தொகு]
| ஆண்டு | படங்கள் | கதாபாத்திரம் | மொழி |
|---|---|---|---|
| 1990 | வாழ்ந்து காட்டுவோம் | தமிழ் | |
| 1991 | இதயவாசல் | தமிழ் | |
| 1992 | நாடோடி | சிந்து | மலையாளம் |
| 1992 | சின்ன பசங்க நாங்க | தமிழ் | |
| 1992 | வசந்த மலர்கள் | தமிழ் | |
| 1992 | தேவர் வீட்டு பொண்ணு | தமிழ் | |
| 1994 | மகாநதி (திரைப்படம்) | பெரிய காவேரி | தமிழ் |
| 1994 | கேப்டன் | தமிழ் | |
| 1994 | என் ராஜாங்கம் | தமிழ் | |
| 1994 | சரிகமபதநீ | தமிழ் |