க்னூ திட்டம்
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
க்னூ திட்டம் (GNU Project) ஆனது, கட்டற்ற மென்பொருள் அடிப்படையிலமைந்த முழுமையான இயங்குதளம் (க்னூ) ஒன்றினை உருவாக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட செயற்றிட்டமாகும்.
ரிச்சர்ட் ஸ்டால்மன் அவர்கள் இத்திட்டத்தினை ஆரம்பித்தார். GNU என்ற சுருக்கப்பதத்தின் விரிவு Gnu is Not Unix என்பதாகும்.
க்னூ இயங்குதளம் யுனிக்சை ஒத்தது, ஆனால் யுனிக்சின் ஆணைமூலத்தை பயன்படுத்தவில்லை என்பதால் இப்பெயர் தெரிவுசெய்யப்பட்டது.
இத்திட்டத்துக்கான அறிவித்தல் திரு. ரிச்சர்ட் ஸ்டால்மன் அவர்களால் 1983 இல் வெளியானது. 1984 ஜனவரியில் இதற்கான மென்பொருள் விருத்தி பணிகள் ஆரம்பமாயின. இன்று வரை இத்திட்டமானது விருத்தி நிலையிலேயே இருக்கிறது. பூர்த்தியடையவில்லை. ஆயினும், இத்திட்டத்தின் பெறுபேறாக உருவான கட்டற்ற திறந்தமூல மென்பொருட்களையும், லினக்ஸ் கருவினையும் கொண்டு உருவாக்கப்பட்ட க்னூ/லினக்ஸ் இயங்குதளம் இன்று மிக பிரபலமாகியுள்ளது.
இச்செயற்றிட்டத்தின் பொதுவில் அறியப்பட்ட வெளியீடுகள் பெரும்பாலும் மென்பொருட்களாகவும் தொழில்நுட்பம் சார்ந்தவையாகவும் இருந்தபோதும் இத்திட்டமானது, சமூக, அற, அரசியல் இயக்கமாகவே ஆரம்பிக்கப்பட்டது.
மென்பொருட்களையும், மென்பொருள் உரிம ஒப்பந்தங்களையும் உருவாக்குவதுபோன்றே க்னூ திட்டமானது பெருமளவில் தத்துவம் சார் எழுத்தாக்கங்களை வெளியிட்டு வருகிறது. இவை பெரும்பாலும் ரிச்சர்ட் ஸ்டால்மன் அவர்களால் எழுதப்படுபவையாகும்
க்னூ திட்டத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர்கள்[தொகு]
|
|
|
| இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும். | |
- இராபர்ட் ஜே. செஸ்ஸல் (Robert J. Chassell)
- Loïc Dachary
- ரிச்சர்டோ காலி (Ricardo Galli)
- ஜார்ஜ் க்ரீவ் (Georg Greve)
- ஃபிரடரிக்கோ ஹெயின்சு (Federico Heinz)
- Bradley Kuhn
- Eben Moglen
- ரிச்சர்டு ஸ்டால்மேன் (Richard Stallman)
- டேவிட் சுகர் (David Sugar)