கோ-கோ
கோ கோ (Kho kho) ஓர் இந்திய விளையாட்டாகும். களத்தில் உள்ள 9 பேர்களையும் தொட்டு புறம் போக்குவதே எதிரணி ஆட்டக்காரரின் நோக்கமாகும்.சடுகுடு விளையாட்டைப் போன்றது எனினும் இது அதனிலும் வேறுபட்டது.
களத்தில் ஓர் அணியின் வீரர்கள் ஓர் வரிசையில்,அடுத்தடுத்தவர்கள் எதிர்திசையை நோக்கியவாறு அமர்ந்திருப்பர். எதிரணி இரண்டு அல்லது மூன்று வீரர்களை களத்தில் இறக்குவர்.அமர்ந்திருக்கும் அணியின் நோக்கம் எதிரணியின் போட்டியாளரை துரத்தி தொட்டு வெளியேற்றுவது. ஆனால் அவர்கள் ஒரே திசையில்தான் ஓட வேண்டும்;அமர்ந்திருப்பவர்களுக்கிடையே குறுக்கே புக முடியாது.மாற்றாக ஓடும் எதிரணியினர் அவ்வாறு குறுக்கே செல்லலாம். துரத்துபவர்கள் வரிசையின் கடைசி வரை ஓடி அதன் பின்னரே மற்ற திசையில் ஓட முடியும்.துரத்தும் பணியை தனக்கு முதுகு காட்டி அமர்ந்து கொண்டிருக்கும் நபரிடம் மாற்றி விடலாம். அப்போது கோ என ஒலி எழுப்புவர்.இது துரத்துபவர் மாறுவதைக் குறிக்கும். எந்த அணி குறைந்த நேரத்தில் எதிரணியின் அனைத்து வீரர்களையும் வெளியேற்றுகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள்.
விதிகள் [தொகு]
- ஒவ்வொரு அணியும் 12 வீரர்கள் கொண்டிருக்கும், ஆனால் 9 வீரர்கள் மட்டுமே ஒரு போட்டியில் களம் காண முடியும்.
- ஒரு போட்டியில் இரண்டு ஆட்டங்களை கொண்டது. ஒரு ஆட்டம் ஓடுவது மற்றும் தொடுவது என ஒவ்வொன்றும் தலா 9 நிமிடங்கள் கொண்டது.